Alluri Sitarama Raju : பிரதமர் திறந்துவைத்த சிலை.. யார் இந்த அல்லூரி சீதாராம ராஜூ? தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்...
![Alluri Sitarama Raju : பிரதமர் திறந்துவைத்த சிலை.. யார் இந்த அல்லூரி சீதாராம ராஜூ? தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? who is Alluri Sitarama Raju whose statue was inaugurated in Andhra Pradesh by PM Narendra Modi Alluri Sitarama Raju : பிரதமர் திறந்துவைத்த சிலை.. யார் இந்த அல்லூரி சீதாராம ராஜூ? தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/8f583f9e3d13579e538eb9039515b1cf1656934881_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆந்திரப் பிரதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் சிலையைத் திறந்து வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த ஆண்டு விழாவை அனுசரிக்கவும், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்..
1. கடந்த 1897ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று பிறந்த அல்லூரி சீதாராம ராஜூ கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருக்கு ஆதரவாக பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதால் நினைவுகூரப்பட்டு வருகிறார்.
2. கடந்த 1922ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சியைத் தலைமை தாங்கினார் அல்லூரி சீதாராம ராஜூ. அதனால் அப்பகுதி மக்களால் `மான்யம் வீருடு’ என அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பொருள், `காடுகளின் நாயகன்’.
Leaving for Bhimavaram to attend a very special programme- the 125th birth anniversary celebrations of the great freedom fighter Alluri Sitarama Raju. Will also unveil a bronze statue of Alluri Sitarama Raju. This will enhance the Azadi Ka Amrit Mahotsav celebrations.
— Narendra Modi (@narendramodi) July 4, 2022
3. அல்லூரி சீதாராம ராஜூ ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றில் தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் முரளி அட்டூரி வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில், அல்லூரி சீதாராம ராஜூ தனது 18வது வயதில் சந்நியாசியாகியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
4. ஆந்திரப் பிரதேசத்தின் விஜியநகரம் மாவட்டத்தில் உள்ள பண்ட்ராங்கி பகுதியில் பிறந்தவர் அல்லூரி சீதாராம ராஜூ.
5. அல்லூரி சீதாராம ராஜூ தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற சிலையுடன் கூடிய அல்லூரி தியான மந்திர் என்னும் கோயிலைக் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கோயிலில் அல்லூரி சீதாராம ராஜூவின் வாழ்க்கை வரலாறு ஓவியங்கள் மூலமும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமும் மக்களுக்குக் காட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)