Esakki Subaya MLA : தவெகவிற்கு இன்று பல்டி அடிக்கும் அடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இபிஎஸ்க்கு ஷாக் - நடப்பது என்ன.?
Esakki Subaya MLA : அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்றும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு பேர் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

தேர்தல் தோல்வி- அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு திடீர் திருப்பங்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக முதல் முறையாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றியை பெற்றுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுகவில் ஒரு பிரிவினரிடம் தவெக சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
இரண்டாக பிளவுப்பட்ட அதிமுக
இந்த நிலையில் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் களம் இறங்கியது. ஆனால் தவெகவிற்கு ஆதரவு இல்லையென எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25எம்எல்ஏக்களும், இபிஎஸ் தலைமையில் 22 எம்எல்ஏக்களும் செயல்பட்டனர். சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு எதிராக அந்த 25 எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதையடுத்து அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 30 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.
நட்டாற்றில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தூய ஆட்சி எனக்கூறி வந்த தவெக தற்போது குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அதிமுக எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஷாக் ஆன முதலமைச்சர் விஜய், அதிமுக தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் தருவதாக சொன்ன வாக்குறுதியில் இருந்து பின்வாங்கினார்.
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணியை நம்பி வந்த அதிமுக எம்எல்ஏக்கள் நட்டாற்றில் தவித்தனர். மீண்டும் அதிமுகவிற்கு செல்ல முடியாமலும், தவெகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்க முடியாமலும் தவித்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று யாரும் எதிர்பார திருப்பமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயகுமார் ராஜினாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து அடுத்த சில நிமிடங்களில் தவெகவில் இணைந்நு எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா
இந்த நிலையில் இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று காலை சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார். இதன் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 43 ஆகவும் , இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 27 ஆகவும் , வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 16 ஆகவும் மாற உள்ளது . அதே நேரம் இன்று இசக்கி சுப்பையா மட்டுமில்லாமல் மேலும் சில அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இபிஎஸ் திட்டம் என்ன.?
இதனிடையே பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் கட்சி உறுப்பினராக மட்டுமே தொடர முடியும். மீண்டும் கட்சி பதவி வழங்க முடியாது என உறுதியாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற திட்டமிட்டுள்ளனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















