AP Election 2024: அப்துல் கலாம் பெயரை மாற்றிய ஜெகன்! ஆந்திராவில் தோற்க முக்கிய காரணம் இதுவா?
175 தொகுதிகளை கொண்ட ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 11 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர சட்டமன்ற தேர்தல்
175 தொகுதிகளை கொண்ட ஆந்திரா சட்டமன்றத்திற்கு கடந்த மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், தெலுங்கு தேசம் கட்சி பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 175 தொகுதிகளில் 135ல் வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களே கிடைத்தது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
அப்துல் கலாம் பெயர்:
ஆந்திர அரசியலில் இப்படி ஒரு திருப்புமுனை இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு மத்தியில் பாஜக ஆட்சி அமைய மிக முக்கியமாக தேவைப்படுவதால் சந்திரபாபு நாயுடு புகழ் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இதனிடையே இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள ஒய்எஸ்ஆர் வியூ பாயிண்ட் பெயர் பலகையில் சிலர் அப்துல்கலாம் பெயரை ஒட்டி தெலுங்கு தேசம் கட்சியின் கொண்டாடுகின்றனர்.
కాలం గారి పేరు తీసేసి వాడబ్బా పేరు పెట్టాడు....
— బెజవాడ కుర్రోడు 🤙🏻🔥 (@AyanPawanist_) June 4, 2024
అంబేద్కర్ గారి పేరు తీసేసి వాడి పేరు పెట్టుకున్నాడు..
నిన్నే తీసేస్తే ఎవరి పేర్లు మార్చనవసరంలేదు అనుకున్నారు జనం 😂😂😂😂
YSR View Point restored to its original name Abdul Kalam View point in Vizag by people.#ApElections2024 pic.twitter.com/sSd5FOLpmO
என்ன நடந்தது?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சீதாம்மா கொண்டா கடற்கரை பகுதியில் மக்கள் கடலின் அழகை ரசிக்கும் பொருட்டு ‘வியூ பாயிண்ட்’ ஒன்றை நிறுவி அதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்டப்பட்டு இருந்தது. இப்படியான நிலையில் கடந்தாண்டு நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது விசாகப்பட்டினம் நகரத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது அப்துல்கலாம் வியூ பாயின்ட் என்ற பெயர் மாற்றப்பட்டது.
அதற்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி நினைவாக ஒய்எஸ்ஆர் வியூ பாயின்ட் என்று மாற்றம் செய்யப்பட்டது. இது அம்மாநிலத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. குறிப்பாக அப்போது எதிர்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தது.
சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில், நேர்மை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சிகாக விரும்பப்படும் மக்கள் ஜனாதிபதியை அவமதிக்கிறீர்கள். இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய நபர்களில் ஒருவரின் பாரம்பரியத்தை அரசியலை வைத்து விளையாடுகிறார்கள். குற்றம் சாட்டினார். மேலும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நிரந்தர முதல்வராக விரும்புவதாகவும், ஆந்திராவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களின் பெயர்களை தனது விருப்பப்படி மாற்றி வருகிறார் எனவும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.