மேலும் அறிய

எங்களுக்கு பணம் கம்மி, ஆட்கள் கம்மி.. ஆனால் ஆதரவு இல்லாமல் அரியணை ஏறி இருக்க முடியாது - மாணிக்கம் தாகூர் காட்டம் !

எங்களுக்கு கம்மியான ஆட்கள் இருக்கலாம் பணம் கம்மியாக இருக்கலாம் ஆனால் எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் அரியணை ஏறி இருக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள். -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

தளபதி போன்றவர்கள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்காதது காங்கிரஸ் கட்சிக்கு மீது மிகப்பெரிய வருத்தம்.

மதுரையில் எம்.பி பேச்சு

மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் விஜயுடன் கூட்டணி சென்று விடுவோம் என தெரிவித்தனர்.

எம்பி மாணிக்கம் தாகூர் கூட்டத்தில் பேசும்போது கூறுகையில்..,” ராகுல் காந்தி அவர்களை பேச விடாமல் செய்ததற்காக மோடி அரசு சஸ்பெண்ட் செய்தது எட்டு பேர் 7 பேர் காங்கிரஸ் ஒருவர் கம்யூனிஸ்ட்.  பாஜககாரனை எதிர்த்து நிற்கும் தைரியம் காங்கிரசுக்கு மட்டும் தான் உள்ளது. அன்போடும் மரியாதையோடும் எங்கள் நடத்தினால் நாங்களும் அப்படி இருப்போம் எங்களை கீழ்படுத்தி பேச நினைத்தவர்களுக்கு அதே போல் பதில் கொடுப்பவர் தான் காங்கிரஸ்காரர். காங்கிரஸ் கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தியும் கார்கே அவர்களும் இந்தியா கூட்டணியை எடுத்துச் செல்ல போராடுகிறார்கள். ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்து அவர்கள் போராட்டம் தொடர்கிறது. தமிழகத்தில் 2016 முதல் திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. இந்த கூட்டணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் குழு பிப்ரவரி 22ஆம் தேதி அதுவரைக்கும் குழு அமைக்கப்படும் என்று திமுக சொல்லி இருக்கிறது ஆனால் 70 நாளாக நாம் காத்திருக்கிறோம். தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதைப்போலவே நாமும் எதிர்பார்க்கிறோம். 

திமுக கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்.

காங்கிரஸ் கட்சி கப்பலை போன்ற மிகப்பெரிய கட்சி க்கும் ஆரம்பிப்பதற்கும், திரும்புவதற்கும் நேரம் எடுக்கும். நான் கேட்பது மரியாதை அன்பு மட்டும்தான் சொத்துசுகம் கேட்கவில்லை. திமுக மாவட்ட செயலாளர் காங்கிரஸ் கட்சி குறித்து பேசும்போது தான் வருத்தம் வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு அமைச்சர் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என்கிறார். இன்னொரு அமைச்சர் அதெல்லாம் எங்கள் தலைவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்வது வலியை தருகிறது. நீங்கள் செய்த தவறுக்காக பலியை சுமந்தவர்கள் நாங்கள். எங்களை பொறுத்த அளவில் அண்ணன் என்றால் அண்ணன்தான். தமிழே, அமுதே, இனிதே என்று பேசத் தெரியாது. ராகுல் காந்தி அவர்களுக்கு திமுக கொடுக்கின்ற உறவை காங்கிரஸ் கீழ் மட்டத்தில்  இருப்பவர்களுக்கும் திமுக கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்.

காமராஜர், கக்கன் வழியில் வந்தவர்கள்

மாவட்ட செயலாளர் பேசியதற்கு நடவடிக்கை எடுக்க சொல்லி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அடுத்தடுத்து அமைச்சர்கள் பேசுகிறார்கள். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம் திருப்பி பேசுவோம். நான் மீண்டும் விருதுநகரில்  தொகுதியில் எம்பி ஆக நிற்கப்போவதில்லை. காங்கிரஸ் காரன் தான் கடைசிவரை சாகும் வரை காங்கிரஸ்காரன் தான் என்று நான் கட்சிக்கே வரவில்லை எனது தலைவர் என்னை எம்பி ஆக்கினார். நாங்கள் எதற்கும் கமிஷன் கேட்டதில்லை நாங்கள் எல்லாம் காமராஜர், கக்கன் வழியில் வந்தவர்கள். அடுத்தவன் ஆசைப்படாதவன் தான் காங்கிரஸ் காரன்.

நமக்குத் தேவை எல்லாம் மரியாதை, மரியாதை, மரியாதை.

தளபதி போன்றவர்கள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்காதது காங்கிரஸ் கட்சிக்கு மீது மிகப்பெரிய வருத்தம். திமுக எம்எல்ஏ தளபதி பேசிய வீடியோவை நிர்வாகிகளுக்கு போட்டு காட்டுகிறார். செல்வப் பெருந்தகை அவர்களின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து 20 நாட்கள் ஆகிவிட்டது. திமுக தளபதி கூறியதற்கு- பூத்து முகவர்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என தொதி வாரியாக கூறினார். காங்கிரஸ் கட்சியின் லட்சியமே மதுரை வடக்கு தொகுதி தான். கார்கே அவர்களிடம் சொல்லி இருக்கிறேன் மதுரை வடக்கு வேண்டும் என்று. நாம் திமுக கூட்டணியில் பேசுகிறோம். நமக்கு உரிய மரியாதை வேண்டும். ராகுல் காந்தி 2024 இல் பிரதமர் வேட்பாளர் இல்லை. ராகுல் காந்தி  நடிக்க தெரியாதவர் உண்மையாக மக்களை நேசிப்பவர். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாம் உழைப்போம். நமக்குத் தேவை எல்லாம் மரியாதை, மரியாதை, மரியாதை” என்றார்.

தலைப்பு செய்திகள்

குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget