மேலும் அறிய

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்? முடிவுகள் எப்போது தெரியும்..?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டில் கடந்த 19-ந் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

பலத்த பாதுகாப்பு :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வாக்குகள் அனைத்தும் 268 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே, நுழைவு வாயில் மற்றும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறை ஆகிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ட்ராங் ரூம் முன்பு துப்பாக்கிய ஏந்திய  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை தேர்தல் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிப்பு கேமராவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்? முடிவுகள் எப்போது தெரியும்..?

வாக்கு எண்ணிக்கை  எவ்வாறு நடைபெறும் ?

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 8 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வார்டுகள் வாரியாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு 14 மேஜைகளில் வைக்கப்படும்.  

3 சுற்றுகள் :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்? முடிவுகள் எப்போது தெரியும்..?

பின்னர், கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் சீல் வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து, கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும். இதுவே, ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையாக கருதப்படும்.

நகராட்சி, மாநகராட்சியை பொறுத்தவரை பெரும்பாலான வார்டுகளுக்கான தேர்தல் 40க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றதால் அதிகபட்சமாக 3 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். பேரூராட்சி வார்டுகளை பொறுத்தமட்டில் ஒரு வார்டுக்கு 10 முதல் 20 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றதால் ஓரிரு சுற்றுகளில் முடிவுகள் வெளியிடப்படும். இதுபோன்று ஒவ்வொரு வார்டாக ஓட்டுகள் எண்ணப்படும்.

தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்? முடிவுகள் எப்போது தெரியும்..?

ஒவ்வொரு சுற்று முடிவு விவரமும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். மேலும், ஒலி பெருக்கி மூலமும் அறிவிக்கப்படும். தபால் வாக்குகளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார்டிலும் குறைவான எண்ணிக்கையிலே இருக்கும் என்பதால் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிடும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதலே தெரிந்துவிடும். அதே சமயத்தில் காலை 11 மணி முதல் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரியவரும். மாலை 3 மணிக்குள் அனைத்து வார்டுகளின் முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வாக்கு எண்ணும் மையத்திலே வெற்றிச்சான்றிதழ் வழங்கப்படும்.

யார்? யார்? உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்?

வாக்கு எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை இடத்திற்குள் வேட்பாளர்கள், அவர்களது தலைமை முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளரின் தலைமை முகவர் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள் தடையில்லா மின்சாரம், கணினி வசதி, உணவு மற்றும் குடிநீர்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து வைக்கப்பட்டுள்ளது.  

TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget