மேலும் அறிய

BJP TamilNadu : “இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவு இதுதான்..!

”அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போகிறார், பாஜக மாநில தலைவராக மீண்டும் தமிழிசை நியமனம் செய்யப்போகிறார் என்ற தகவல் பல இடங்களில் தீயாக பரவிய நிலையில், இந்த புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்தவுள்ளது”

மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடத்தை பிடித்துள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.BJP TamilNadu : “இஷ்டத்திற்கு பேசக் கூடாது – தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக மேலிடம் போட்ட உத்தரவு இதுதான்..!

அண்ணாமலை Vs தமிழிசை சவுந்தரராஜன்

இந்நிலையில், முன்னாள் பாஜக மாநில தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைமையான அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார். அதே நேரத்தில் பாஜக வை சேர்ந்த கல்யாணராமன் என்பவரும் சமூக வலைதளங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் – சூளுரைத்த அண்ணாமலை

3வது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அவர்களுடைய முழு கவனமும் தென் மாநிலங்கள் பக்கம் திரும்பியிருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 2026ல் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து அதற்கான காய்களை இப்போதே நகர்த்த தொடங்கியிருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், 2026 தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் தேசிய தலைமை

தமிழ்நாட்டில் கட்சியை மிகப்பெரிய அளவில் வளர்க்க தலைமை முடிவெடுத்து அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், பாஜகவில் தமிழிசை உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், சிலர் கோஷ்டியாக இணைந்து ஆலோசிப்பதும் டெல்லி பாஜக தேசிய தலைமையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

அண்ணாமலையிடம் ஆலோசித்த பியூஸ் கோயல்

இது குறித்து டெல்லியில் இருந்த அண்ணாமலையை அழைத்து தமிழக பாஜகவின் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, மாநில தலைவர்கள் யாரும் தேவையின்றி பேசக் கூடாது என்றும், செய்தியாளர் சந்திப்போ, நேர்காணல்களோ ஊடகங்களுக்கு கொடுத்தால் முறைப்படி மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்த பிறகே பேச வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

தேவையற்ற சலசலப்பை தவிர்க்க உத்தி

அதே நேரத்தில் பிரஸ்மீட் வைத்தால், அது இனி திட்டமிட்ட செய்தியாளர் சந்திப்பாக மட்டுமே இருக்க வேண்டும், எது குறித்து பேசப் போகிறோ என்பதை பாஜக தலைவர்கள் தலைமை சொன்ன பிறகே செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இனி திட்டமிட்ட பிரஸ்மீட் மட்டும்தான் – திட்டவட்டமாக சொன்ன அண்ணாமலை

அதன்பிறகு நேற்று விமான மூலம் கோவை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இனி செல்ல்ம் இடங்களில் எல்லாம் செய்தியாளர்களிடம் பேச முடியாது என்றும் விமானத்தில் வரும் அந்த குறிப்பிட்ட இடைவெளியில் சில விஷயங்கள் நடந்துவிடுகிறது. அது தெரிவதில்லை. அதனால், பாஜக தலைவர்கள் இனி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினால், அது பாஜக அலுவலகத்தில் வைத்து மட்டுமே முறைப்படி பேட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போகிறார், பாஜக மாநில தலைவராக மீண்டும் தமிழிசை நியமனம் செய்யப்போகிறார் என்ற தகவல் பல இடங்களில் தீயாக பரவிய நிலையில், இந்த புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்தவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Nellaiappar Temple Song  : நெல்லையப்பருக்கு பிரத்யேக பாடல்!உற்சாகத்தில் பக்தர்கள்Senji Masthan : மஸ்தானுக்கு டம்மி பதவி? ஓரங்கட்டுகிறதா திமுக?Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Watch Video: மனைவி முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சீண்டிய ரசிகர்.. பாய்ந்து அடிக்க ஓடியதால் பரபரப்பு..!
மனைவி முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சீண்டிய ரசிகர்.. பாய்ந்து அடிக்க ஓடியதால் பரபரப்பு..!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
T20 World Cup 2026: இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
Embed widget