TVK Vijay: ”திருவாரூர் கருவாடா காயுது”- பச்சை துண்டு உடன் களம் இறங்கிய விஜய் !
TVK Vijay : குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும் என்று திருவாரூரில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

TVK Vijay : குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும் என்று திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
திருவாரூர் கருவாடா காயுது:
தவெக தலைவர் இரண்டாவது சுற்றுபயணமாக இன்று (செப்டம்பர் 20) ஆம் தேதி திருவாரூரில் அந்த கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது, “திருவாரூர் என்று சொன்னதும் நினைவிற்கு வருவது தியாகராயாரின் ஆடித்தேர்தான். திருவாரூர் தேரை ஓடவைத்தது நான் தான் என்று மார்தட்டி சொல்லிக்கொண்டது யார் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் அவருடைய மகன் சி.எம்.சார் இப்போ என்ன செய்றாங்கா.. நல்லா ஓட வேண்டிய தமிழ் நாடு எனும் தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு ஆடாமல், அசையாமல் அப்படியே நிறுத்திவிட்டார். இதை பெருமையாகவும் சவாலாகவும் சொல்லிக்கொள்கிறார்.
அடிப்படை சாலை வசதிகள் கூட இல்லை:
திருவாரூர் மாவட்டம் தான் அவர்களின் சொந்த மாவட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கு திருவாரூர் கருவாடாய் காய்கிறது. அதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. உங்கள் அப்பா பெயரில் பேனா வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள், எல்லா இடத்திற்கும் உங்கள் அப்பா பெயரை வைக்கிறீர்கள். உங்க அப்பா பொறந்த இந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அடிப்படை சாலை வசதிகள் கூட சாரியாக இல்லை. இங்கு இருக்கும் பல்கலைகழகங்களில் எல்லா துறைகளும் இருக்கிறாதா.
கண்டிப்பாக இருக்காது. இங்கு இருக்கும் மெடிக்கல் காலேஜே வைத்தியம் பார்க்கும் சூழலில் தான் இருக்கிறது. மருத்துவமனிகளில் நிறைய பொருட்களே வேலை செய்யவில்லை.”என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவருடைய வேலை முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வது மட்டும் தான்”என்று கூறினார்.





















