TVK Vs ADMK: குழப்பிவிட்ட பிரஷாந்த் கிஷோர்.. கூட்டணியை இழந்த விஜய்.. இப்போ புலம்பி என்ன யூஸ் ப்ரோ.?
அதிமுகவிடம் ஓவராக டிமாண்ட் செய்து, கூட்டணியை கோட்டைவிட்டு விட்டதாக தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் யார் என்று தெரியுமா.?

உங்க பேச்சை எல்லாம் கேட்டதுதான் பிரச்சனையை... துணை முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, இரண்டரை ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி என்று ஓவராகத்தான் டிமாண்ட் பண்ணிவிட்டோம் என்று தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியை தவறவிட்டதை உணர்ந்த விஜய்...
அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியான பிறகு தவெக தலைவர் விஜய் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார். அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட சூழலில் விஜய்-யின் அந்த அறிக்கை அதிமுக - தவெக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது. இதனால் திமுக விற்கு எதிரான மூன்றாவது கூட்டணியைத் தான் விஜய் அமைக்க முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் மூன்றாவது அணியை விஜய் அமைத்தால் தனக்கான வாக்கு வங்கியை காட்டலாமே தவிர வெற்றி பெறுவது சாத்தியமில்லை 2015 ஆம் ஆண்டு உருவான மக்கள் நலக் கூட்டணியை போல் தான் அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்ல, விஜய்யும் அதை உணர்ந்ததாகவே தெரிகிறது.
முன்னதாக, அதிமுகவிடம் திரைமறைவில் தவெக நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, துணை முதலைச்சர் பதவி, அதிக இடங்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு டிமாண்டுகளை விஜய் தரப்பு வைத்ததாக கூறப்பட்டது. இதற்கெல்லாம் அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும், திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் அந்த ஒற்றை இலக்கோடு நாம் பயணிப்போம் என்று கூறியதாகவும் சொல்லப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியின் முடிவை மாற்றிய ‘அந்த‘ டிமாண்ட்
அதே நேரம் தவெக உடன் கூட்டணி அமைக்கும் விருப்பத்துடனேயே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்ததாகவும் தகவல் வெளியானது. கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு சென்ற நிலையில் தான், விஜய் தரப்பில் இருந்த வந்த மெஸேஜ் அதிமுகவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, அதிமுக இரண்டரை ஆண்டுகளும், விஜய் இரண்டரை ஆண்டுகளும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது தான் எடப்பாடியை அப்செட் ஆக்கியாதாக சொல்கின்றனர். அந்த வெளிப்பாடு தான், பாஜக உடன் எடப்பாடி கூட்டணி வைத்ததற்கான பின்னணி என்றும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தாலும் அதில் இன்னும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த சூழலில் தான், அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பு இல்லை என்றாலும் கூட, துணை முதலமைச்சர் பதவிக்காகவாவது அதிமுகவுடனான கூட்டணியை முடித்திருக்கலாம் என்று தற்போது விஜய் உணர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது அணி அமைத்து அதில் பாமக கூட்டணிக்கு வந்தாலும், விசிக அந்த கூட்டணியில் இடம் பெறாது. அதோடு, பல்வேறு குழப்பங்களும் நீடிப்பதால், மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்திப்பது மிகப்பெரிய பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்றும் விஜய் தற்போது புரிந்து கொண்டாதக சொல்லப்படுகிறது.
அப்படி ஒருவேளை இந்த தேர்தல் விஜய்க்கு சரியாக போகவில்லை என்றால், கமல் எப்படி காணாமல் போனாரோ அதைப்போல் விஜயும் பார்ட்டைம் அரசியல்வாதியைப் போல் காணாமல் போவார். அதனால், இந்த தேர்தலில் ஒரு இம்ப்பேக்ட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதற்கு ஒரே சாய்ஸ் அதிமுக கூட்டணி தான் என்பதை விஜய் பொறுமையாக உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உங்க பேச்சை எல்லாம் கேட்டதுதான் பிரச்சனையை.. துணை முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, இரண்டரை ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி என்று ஓவராகத்தான் டிமாண்ட் பண்ணிவிட்டோம் என்று பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிமாண்டை ஏற்றிவிட்ட பிரஷாந்த் கிஷோர்
ஏனென்றால், துணை முதலமைச்சர் பதவியே இப்போதைக்கு போதும் என்று இருந்த விஜய்-யை, இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும் டிமாண்டையும் வையுங்கள் என்று சொன்னது பிரஷாந்த் கிஷோர் தான் என்று கூறப்படுகிறது. அந்த ஒரு பாய்ண்ட்டில் தான் கூட்டணி வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இருந்தாலும், தேர்தல் நெருக்கத்தில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அப்படி விஜய் அதிமுகவிடம் சென்றால், முன்பு வைத்த அந்த டிமாண்டுகளை வைக்க முடியாது. அப்படியே வைத்தாலும், அதிமுக அதை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், விஜய்யின் நிலைமை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது...





















