மேலும் அறிய

TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?

TVK Vijay: திமுக எடுத்துள்ள புதிய முடிவால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற தங்களது எண்ணம் நிறைவேற உள்ளதாக தவெக தரப்பு மகிழ்ச்சியில் உள்ளதாம்.

TVK Vijay: பாஜகவிற்கு எதிரான எதிர்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என திமுக அறிவித்துள்ளது.

டெல்லிக்கு ஷாக் கொடுத்த திமுக..!

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியானது தவெக கூட்டணியில் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ளது. இதனால், தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் INDI கூட்டணியில் திமுக தொடர்கிறதா? இல்லையா? என்ற கேள்வி நிலவி வந்தது. இதுதொடர்பான கேள்விக்கு திமுக அந்த கூட்டணியில் தொடர்வதாக அண்மையில் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் வரும் 8ம் தேதி அன்று, INDI கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுக பங்கேற்க வேண்டும் என அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ”தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா" கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது” என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

திமுக முடிவால் பனையூர் ஹாப்பி..!

திமுகவின் முடிவானது ஒட்டுமொத்தமாகவே எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த அறிவிப்பானது தமிழக வெற்றிக் கழகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். திமுக வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை பிடிக்கவும் தீவிரம் காட்டி வருகிறதாம். இதன் மூலம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற தங்களது இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். அதேநேரம், நிர்வாக ரீதியாகவும் வெளிப்படையாக பாஜகவை எதிர்ப்பதாக முதலமைச்சர் விஜய் இதுவரை எங்கும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்ததால் பாஜக தலைமை விஜய் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியா கூட்டணியில் இணைந்தால் அது மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜயின் இலக்கு..!

வரும் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என விஜய் விரும்புகிறராம். இதற்காக தென்மாநிலங்களில் தனக்கு செல்வாக்கு உள்ள பிராந்தியங்களில் தவெகவை விரிவுபடுத்துவதோடு,  இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டியது அவசியம் எனவும் கருதுகிறாராம். ஆனால், அந்த கூட்டணியில் திமுக இருக்கும் வரை தவெகவிகு வாய்ப்பில்லை என்ற சூழல் நிலவியது. அதேநேரம், தேசிய அளவிலான கூட்டணியில் திமுக தொடர்கிறது என அண்மையில் காங்கிரஸ் தலைவர் சொன்னதையும் விரும்பவில்லையாம்.

இதையும் படியுங்கள்: CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?

இதன் காரணமாகவே நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தங்களது முதல் வாய்ப்பை கூட காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. பாஜகவுடனான உறவு சிக்கலில் உள்ள நிலையில், ஒரே ஒரு எம்பியை பெறுவதை காட்டிலும், நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவை பெறுவதை மிகவும் முக்கியம் என இந்த முடிவை பனையூர் தரப்பு எடுத்துள்ளதாம். இந்நிலையில் திமுக விலகியதை அடுத்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்கான காய்களை வேகமாக நகர்த்தி வருவதாகவும், இது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் தவெக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
Annamalai: கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Udhayanidhi TVK: ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi TVK: ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Embed widget