Annamalai: கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
Annamalai vs kp ramalingam : தமிழக பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி பரவிய நிலையில், அண்ணாமலை ஆதரவாளர்கள் தான் தவறான செய்தியை பரப்பியதாக கே.பி.ராமலிங்கம்குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக தலைமையிடம் புகார் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு- தமிழக அரசியல் கட்சிக்குள் மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திடீர் திருப்பமாக தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிமுக, திமுக, பாஜக என அரசியல் கட்சிக்குள் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. அந்த வகையில் அதிமுகவில் எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாஜகவில் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் வகையில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
அதிமுக- பாஜக கூட்டணி தோல்வி
இதனையடுத்து அண்ணாமலை, பாஜகவின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். தேர்தலிலும் போட்டியிடவில்லை. பிரச்சாரத்திலும் அதிகளவு ஈடுபடவில்லை. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. பாஜக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பாஜக தலைக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் அண்ணாமலை, அந்த வகையில் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அடுத்தாக மத்திய உள்துறை அமைச்சரையும், பாஜக மூத்த தலைவரையும் சந்தித்து தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன.? என பட்டியலை வழங்கியிருந்தார்.
அதிருப்தியில் அண்ணாமலை
எனவே அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம், அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்தால் கட்சி இன்னும் மோசமாக தோல்வி அடைந்திருக்கும் என தெரிவித்திருந்தார். இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், கட்சியில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டதாக செய்தி பரப்பபட்டது. பாஜக மாநில தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் கையெழுத்துடன் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
கே.பி,ராமலிங்கம் நீக்கமா.?
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக வெளியிட்ட அறிக்கையில்,மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும் அவ்வாறு வெளிவந்த அறிக்கை விஷமிகளால் போலியாக தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.. இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராடு அண்ணாமலை இரசிகர்கள்
இதனையடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள பதிவில், என்னைப்பற்றி தவறாக பதிவிட்ட பதர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக சட்டப் பிரிவு தலைவர் குமரகுரு அவர்கள் தேசிய தலைமையின் அறிவுறுத்தல் படி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் , வார்ரூம் சில்லுவண்டுகளுக்கு இது முதல் கட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.
4.6.2026 தேதியிட்ட நயினார் நாகேந்திரன் அறிவிப்பு என்று அண்ணாமலையின் அடிவரடிகள் வெளியிட்ட Fake அறிவிப்பிற்க்கு பாரதிய ஜனதா கட்சி மாநில சட்டபிரிவு தலைவர் கொடுத்துள்ள புகார் மனு , பிராடு அண்ணாமலை இரசிகர்கள் அடங்க வேண்டும் , இல்லையென்றால் அடக்க படுவார்கள் pic.twitter.com/vI6TXjkqyR
— KP Ramalingam Ex-MP (@KPRamalingamMP) June 4, 2026
அடுத்தாக வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 4.6.2026 தேதியிட்ட நயினார் நாகேந்திரன் அறிவிப்பு என்று அண்ணாமலையின் அடிவரடிகள் வெளியிட்ட Fake அறிவிப்பிற்க்கு பாரதிய ஜனதா கட்சி மாநில சட்டபிரிவு தலைவர் கொடுத்துள்ள புகார் மனு , பிராடு அண்ணாமலை இரசிகர்கள் அடங்க வேண்டும் , இல்லையென்றால் அடக்க படுவார்கள் என கே.பி.ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Before You Go
"விஜய் அங்கிள் ஒரு REQUEST" பள்ளி மழலைகள் கோரிக்கை நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
ட்ரெண்டிங் செய்திகள்






















