மேலும் அறிய

Udhayanidhi TVK: ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி

Udhayanidhi TVK: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை அதீத நம்பிக்கையுடன் திமுக எதிர்கொண்டதாலே தோல்வியுற்றதாக, எஅக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Udhayanidhi TVK: திமுகவை போன்று அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டவில்லை என, உதயநிதியின் பேச்சுக்கு தவெக தரப்பு பதிலடி தந்துள்ளது.

திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ட் - உதயநிதி பேச்சு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தனது வெற்றிக்காக உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, “தமிழ்நாடு முழுவதும் உண்மையான எதிரி யார் என்றே தெரியாமல் களமாடி இருக்கிறோம். அங்கேதான் நாம் தவறவிட்டுவிட்டோம். மக்கள் மீது அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் இருந்துவிட்டோம். ஊர் ஊராகப் போய் ஓட்டு கேட்டோம். தெருத் தெருவாக ஓட்டு கேட்டோம். நம் தலைவர் தமிழ்நாடு முழுவதும் போய் ஓட்டு கேட்டார். ஆனால், எங்கே தெரியுமா தவறவிட்டோம்? நம் வீட்டில் இருக்கக்கூடிய, நம் குடும்பத்தினரிடம் ஓட்டு கேட்க மறந்துவிட்டோம். நம் வீட்டில் இருக்கக்கூடிய நம் பிள்ளைகளிடம், நம் உறவினர்களிடம், நம் சாதனைகளைச் சொல்லத் தவறிவிட்டோம். அனைத்து தரப்பு மக்களிடமும் நமது சாதனைகளை கொண்டு சென்று சேர்க்க வேண்டும்” என தெரிவித்தார். அதோடு, திமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது எனவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

களநிலவரம் தெரியாத உதயநிதி

உதயநிதியின் பேச்சுக்கு தவெகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங்கில் உடனடியாக பதிலடி தரப்பட்டுள்ளது. அதில், நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது. ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.

பொறாமையில் பொங்கும் உதயநிதி

சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக்  கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார். வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.  அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.

இதையும் படியுங்கள்: TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்

கோட்டையையே கோட்டை விட்ட திமுக

கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்? சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.  சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார். நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி” என தவெக தரப்பு பதிலடி தந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget