Karur Stampede: TVK பிரச்சாரத்தில் சோகம்: விஜய் கூட்டத்தில் தாய், மகள்கள் மரணம்! அதிர்ச்சியில் தமிழ்நாடு
TVK Stampede: விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Karur Stampede TVK Vijay: " விஜய் பேசிய பிரச்சார கூட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது"
விஜய் பிரச்சார கூட்டம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும், பிரச்சாரக் கூட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். பரப்புரையின்போது அவரை பேச்சு கேட்க, அதிகப்படியான மக்கள் குவிந்ததால் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ?
விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறி பலர் மயக்கமடைந்தனர். இன்று காலை நிலவரப்படி, 8 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட 39 பேர் பலியான நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் இதுவரை 14 பேரில் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம், ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர்
இதனிடையே, இரவோடு இரவாக கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது.
ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
இந்த கூட்ட நெரிசல் சிக்கிய கரூர் தான்தோன்றி மலையைச் பகுதியை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தாய் ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















