TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் எதிர்ப்பு, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அரசுக்கு ஆதரவாகவும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
TVK leader Actor Vijay Passes 26 Resolution: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மாநாட்டைத் தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
செயற்குழு கூட்டம்:
இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
26 தீர்மானங்கள்:
1. கொள்கை மற்றும் கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றுதல்
2. கொள்கை விழா மாநாட்டை வெற்றிகரமாக்கிய நிர்வாகிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தல்
3. மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள் விளக்கம் பற்றிய தீர்மானம்
4. ஜனநாயக கொள்கை தீர்மானம் ( ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு )
5. பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
6.சமூக நீதிக் கொள்கை தீர்மானம் ( சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனே நடத்தவேண்டும் )
7. மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்
8.விவசாய நிலங்கள் பாதுகாப்பு தீர்மானம் ( பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு )
9. கோவைக்கு மெட்ரோ ரயில்
10. ஈழ தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் தீர்மானம்
11.மொழிக் கொள்கை தீர்மானம்
12.மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம்
13.சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தீர்மானம்
14. மின்சார கட்டணத்தை மாற்றியமைக்கும் தீர்மானம்
15. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்
16. உச்ச நீதிமன்ற கிளை அமைத்தல்
17.தமிழ்நாட்டில் தொன்மப் பெருமை பாதுகாப்பு தீர்மானம்
18. விடுதலை போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்த்தல்
19. கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது
20. முதியோர் நல்வாழ்வை உறுதி செய்தல்
21. இயற்கை வள பாதுகாப்பு
22. இஸ்லாமியர்கள் உரிமை
23. நீட் தேர்வு ரத்து தீர்மானம்
24. தசைகால் தமிழர் விருது வழங்கும் தமிழக அரசுக்கு வரவேற்பு என தீர்மானம்
25. தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்திய அரசுக்கு வரவேற்பு என தீர்மானம்
26. மாநாட்டு வேலைகள் ஈடுபட்ட மற்றும் பங்கேற்று உயிரிழந்த தவெகவினருக்கு இரங்கல் தீர்மானம்
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் இறுதியில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
Also Read: "தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசு" இறங்கி அடித்த விஜய்..
Also Read: Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!