Vijay to Meet Governor: கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
TN Government Formation: ஒரு வழியாக தவெக ஆட்சி அமைப்பதற்கான விசிகவின் ஆதரவு கடிதம் கிடைத்துவிட்ட நிலையில், மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆளுநர் என்ன செய்வார்.?

தமிழ்நாடு அரசியலில் விசிக-வால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியி நிலையில், ஒரு வழியாக விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து, ஆதரவு கடிதத்தை பெற்றுவிட்டார் தவெக எம்எல்ஏ ஆதவ் அர்ஜுனா. இதைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேகரை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார். கடிதத்தை பெற்றுக்கொண்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பாரா ஆளுநர்.? என்ன நடக்க வாய்ப்பு உள்ள என்பதை இப்போது பார்க்கலாம்.
தவெகவிற்கு நபந்தனையற்ற ஆதரவை வழங்கிய விசிக
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், 108 இடங்களை வைத்து ஆட்சி அமைக்க முடியாமல் தவெக திணறி வந்தது. இந்நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றின் ஆதரவால், 116 இடங்களாக தவெகவின் பலம் உயர்ந்த நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மையை பெற, இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
ஏற்கனவே அந்த 2 இடங்களை வைத்திருந்த விசிகவிடம் ஆதரவு கேட்டிருந்தார் விஜய். ஆனால், தங்களது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக இழுத்தடித்து வந்தது விசிக. இந்நிலையில், இன்று காலை முதல் மாலை வரை இழுத்தடித்து, சற்று முன்னர் தங்கள் ஆதரவு கடிதத்தை, ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கியுள்ளது விசிக.
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட விஜய்
ஒரு வழியாக 118 என்ற இலக்கை தவெக அடைந்த நிலையில், ஆளுநரை மீண்டும் சந்திக்க மாலை 5 மணிக்கு நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். இப்போது ஆளுநர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடிதத்தை பெற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது, குதிரை பேரம் நடந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதனை விசாரிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் வாய்ப்பை மறுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படி இல்லையென்றால், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடக்கட்டும், கேரளா சென்று விட்டு வந்து பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றுவிடுவாரா என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. தற்போதைய சூழலில், விஜய்க்கு எதிரான மனநிலையில் அளுநர் இருப்பதாக தெரிவதால், தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்தும், ஆளுநர் என்ன செய்வார் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















