இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாகிவிட்டது.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

அரசு திட்டங்கள் முதல் மொபைல் சிம், பள்ளி சேர்க்கை வரை எந்த அதிகாரப்பூர்வ பணிக்கும் இது தேவைப்படுகிறது.

Image Source: freepik

ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள 12 இலக்க தனித்துவ எண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.

Image Source: freepik

பல சமயங்களில் மக்கள் இதை பத்திரமாக வைக்க மறந்து விடுகிறார்கள் அல்லது ஆதார் கார்டு தொலைந்து போகிறது. எனவே நீங்கள் வீட்டிலிருந்தபடியே புதிய ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.

Image Source: freepik

ஆதார் கார்டு தொலைந்து போனால், புதிய ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய முதலில் UIDAI இணையதளத்திற்கு செல்லவும்.

Image Source: freepik

இதற்குப் பிறகு My Aadhaar பகுதியில் தொலைந்து போன அல்லது மறந்து போன UID/EID-ஐ மீட்டெடு என்பதை கிளிக் செய்யவும்.

Image Source: freepik

பெயர், பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சலை உள்ளிட்டு கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

Image Source: freepik

அதன் பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி கிடைக்கும் அதை சரிபார்க்கவும்

Image Source: freepik

ஓடிபி சரிபார்த்த பிறகு, உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தெரியும்.

Image Source: freepik

மேலும் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாகவும் உங்களுக்கு ஆதார் அட்டை அனுப்பப்படும்.

Image Source: freepik