என் நெஞ்சில் குடி இருக்கும்..TVK 1st year anniversery
தவெக ஓராண்டு நிறைவு விழாவில் விஜய் - what bro its very wrong bro!
அரசியலுக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்பது ஜனநாயகம். ஆனால் மக்களுக்குப் பிடித்தவர்கள் வந்தால், ஒரு சிலருக்கு அது எரிச்சல் வரத்தான் செய்யும்
ஒரு கம்பளைண்ட் வந்திருக்கிறது, நமது மாவட்ட நிர்வாகிகள் இளைஞர்களாக இருக்கிறார்கள் என. அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்தபோது அவர்கள் பின்னால் நின்றவர்கள் இளைஞர்கள் தான்
சாதாரண மக்களுக்கானது நம் கட்சி. சாதாரண மக்கள் தானே நிர்வாகிகளாக இருப்பார்கள். ஏன் சாதாரண குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரக்கூடாதா?
அப்போது பண்ணையார்கள் பதவியில் இருந்தனர், ஆனால் தற்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறி விடுகிறார்கள்
இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விட்டே அனுப்ப வேண்டும். அதை ஜனநாயக முறையில் செய்ய வேண்டும் என்பதால் 2026 தேர்தலை சந்திக்க உள்ளோம்
மும்மொழி கொள்கை குறித்து - கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை , பெற வேண்டிய இவர்கள் உரிமை
ஆனால் LKG குழந்தைகள் போல் சண்டை போடுகிறார்கள் நம் பாசிசமும் பாயாசமும்
நம் கொள்கை எதிரியும், அரசியல் எதிரியும் மாறி மாறி ஹேஷ்டாக்(hasgtag) போட்டு விளையாடுகிறார்கள்
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ!
மாநில மொழி கொள்கையை, கல்வி கொள்கையை கேள்வி குறியாக்கி , இன்னொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பது எப்படி ப்ரோ?
BLA - பூத் லெவல் ஏஜென்ட் வேண்டும். 69000 பூத்துகள் உள்ளது. விரைவில் பூத் கமிட்டி மாநாடு ஒன்று நடத்தப்பட உள்ளது. அன்று தெரியும் தமிழக வெற்றி கழகம் எந்த வித கட்சிக்கும் சளைத்தது இல்லை
தமிழகத்தில் முதன்மை சக்தியாக நமது கட்சி இருக்கிறது என்று நிரூபிக்கப்படும்
இவ்வாறு தமிழக வெற்றி கழக ஓராண்டு நிறைவு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியிருந்தார்