மேலும் அறிய

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை சீர்குலைந்து விட்டது - அமைச்சர் சிவசங்கர்

இந்தியாவிலேயே 21000க்கும் அதிமான பேருந்து இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

விழுப்புரம்:  அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை சீர்குலைந்து விட்டதாகவும் திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதாகவும் இந்தியாவிலையே அதிக அளவவில் அரசு பேருந்து இயக்ககூடிய மாநிலமாக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் பணியின் போது உயிரிழந்த வாரிசு தாரர்களுக்கு பணி ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்வு வழுதரெட்டியிலுள்ள சட்டக்கல்லூரியில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் புகழேந்தி, எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து போக்குவரத்துத்துறை சிறப்பான முறையில் செயல்பட்டும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் நலனை கருத்தில்கொண்டு, கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்படாமல் இருந்த நிலுவைத் தொகையினை எல்லாம் வழங்கி வருகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான், போக்குவரத்துறையினை ஏற்படுத்தினார். அந்த வகையில், இந்தியாவிலேயே 21000க்கும் அதிமான பேருந்து இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்துறை ஊழியர்கள் ஓய்வூ பெற்ற பின்னரும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்தும் வருகிறார்கள். டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையினை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையினை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணத்தினை உயர்த்தாமல் உள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை வசதியினையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்துறைக்கென்று கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500/- கோடி நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதன் காரணமாகவே, போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மாதந்தோறும் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர், புதியதாக பேருந்துகள் வாங்குவதற்கான நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கவும் அரசாணை வழங்கியுள்ளார்கள். எனவே, போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுவதற்கும், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget