Anbumani Ramadoss: தமிழ்நாடு வேளாண் அமைச்சர் என்.எல்.சி. தரகராக செயல்படுகிறார் - அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் என்.எல்.சியின் தரகராக செயல்படுகிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் என்.எல்.சியின் தரகராக செயல்படுகிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னை அடையாறில் நடைபெற்றது. அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் சொன்னார். இப்போது அவர் கையில் அதிகாரம் உள்ளது.
ஆனால் ஒரு கடையை மூடவில்லை. ஆன்லைன் கேம்ளிங்க்கு ஆடினன்ஸ் கையெழுத்து போட்ட ஆளுநர் , மசோதாவிற்கு இன்னும் கையெழுத்து போடவில்லை. ஆடியன்ஸ்க்கும் , மசோதாவிற்கும் இடையில் 1 அரை மாதம் தான் இடைவெளி. அந்த இடைவெளியில் என்ன நடந்தது? என்.எல்.சி நிர்வாகத்திற்காக விவசாயிகளிடம் இருந்து இடத்தை பிடிங்கி என்.எல்.சிக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கப்படுகிறது.
என்.எல்.சி க்கு ஒரு தரகராக வேளாண் துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார். காவல் துறையை வைத்து அச்சுறுத்தி , மிரட்டி நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர். 25 ஆயிரம் விளை நிலங்களை அரசு பாதுகாக்க வேண்டும். என்.எல்.சியை நிலம் கையகப்படுத்த நாங்கள் விடமாட்டோம்” இவ்வாறு அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியுள்ளார்.