மேலும் அறிய

இது சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது: உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்

உதயநிதி ஸ்டாலின் நேற்று கூட சொல்லி உள்ளார் எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என்று. இது சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது - பிரேமலதா

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.

தலைமை கழக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீஷ், கழக துணை செயளாலர் பார்த்தசாரதி, கழக அவைத் தலைவர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான அழகாபுரம் மோகன் ராஜ் மற்றும் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ;

இன்று நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பத்து விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கழகத்தின் வளர்ச்சிக்கும் வியூகங்களை அமைத்து தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும் பணிக்காகவும் மிகச் சிறந்த முறையில் ஆலோசனை நடத்தியுள்ளோம். 

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் கழக நிர்வாகிகளையும் மக்களையும் சந்திக்கும் மாபெரும் சுற்றுப்பயணம் உள்ளது, சுற்றுப்பயணம் தொடர்பாக ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். மிகச் சிறப்பான மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

வரப்போகும் தேர்தலுக்கு தேமுதிக சார்பாக எங்கள் பணிகளை இப்போதே தொடங்கியுள்ளோம். 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து பணிகளை தொடங்குகிறோம். ஓராண்டு காலம் கேப்டன் இறந்து நிறைவடையும் நிலையில் அவருக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை எல்லாம் செய்ய உள்ளோம். 

தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளில் அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள் நட்புணர்வு தொடர்கிறது. எங்கள் ஒற்றுமை நல்லவிதமாக சிறப்பாக சென்று கொண்டுள்ளது.

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பொழுது கொடுத்த வாக்குறுதிகள் இன்றளவும் நிறைவேற்றவில்லை. அதில் ஒரு பகுதியாக ஆசிரியர் பெருமக்கள் பல்வேறு போராட்டங்களில் நடத்தி வருகிறார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் போராட்டங்களை நடத்த வேண்டியதில்லை. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார் ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று களத்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை சென்று சந்தித்து பேசும் பொழுது தான் எவ்வளவு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பது தெரிகிறது.

விஜய் கூட்டணி - நீங்கள் தான் கேட்க வேண்டும்

விஜய் குறித்த நிலைப்பாட்டை நீங்கள் விஜயிடம் தான் கேட்க வேண்டும். அவரின் எண்ணம் என்ன வியூகம் என்ன கூட்டணியா இல்லையா என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் தான் கேட்க வேண்டும். விஜய் மாநாடு அன்று என்னுடைய வலைதள பக்கத்தில் நான் பதிவிட்ட தகவல் தேமுதிக நிர்வாகிகள் எனக்கு அனுப்பியது தான். அதை தான் நான் பகிர்ந்தேன் தமிழ்நாட்டில் மாபெரும் மாநாடு நடத்தி சரித்திர சாதனை படைத்தவர் கேப்டன்.

ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டார் அந்த தொகுதி முடிவு தெரிவதற்கு முன்பாகவே அவர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக முதலமைச்சரே சொன்னார். 

அதே போல் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று மக்களை மூளை செலவை செய்கிறார்கள்.அவர்களுக்கு எந்த அளவிற்கு கான்ஃபிடன்ஸ் உள்ளதோ அதே அளவிற்கு எங்களுக்கு உள்ளது 200 அல்ல 230 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் அதற்கான வியூகம் கூட்டணி என்பதை அந்தந்த கால கட்டங்களில் அமைத்து அறிவிப்போம்.

விஜய பிரபாகரனுக்கு கட்சி பொறுப்பு ?

விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்ந்து நிர்வாகிகள் கோரிக்கை வைக்கிறார்கள். மூத்த நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர்கள் கலந்து பேசி செயற்குழு பொதுக்குழு எப்போது என்பதை அறிவிக்க இருக்கிறோம். 
அப்போது விஜய் பிரபாகரனுக்கு மட்டுமல்ல பல முக்கிய நிர்வாகிகளுக்கு பதவிகளை அறிவிக்க உள்ளோம்.

வாய் சவுடால் விடுகிறார்கள்

ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தாங்கவில்லை என்பது ஒட்டு மொத்த சென்னை வாசிகளுக்கு தெரியும். தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் எப்படி உள்ளது என்பது தெரியும். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் வாய் சவுடால் விட்டுக் கொண்டுள்ளார்கள்.

திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் உள்ளது இது 2026 ஆம் ஆண்டு வரை தொடருமா என்ற கேள்வி உள்ளது.
இந்த திமுகவின் கூட்டணி ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அனைத்தும் வாடகைக்கு எடுக்கும் ஆட்சி

மழை வந்தால் போட் , பேருந்து என அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் ஆட்சியாக உள்ளது. நிரந்தர தீர்வை ஏற்படுத்தி மக்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் அரசாக ஏற்றுக் கொள்ள முடியாது. 

வரும் டிசம்பர் மாதம் பெரு மழை உள்ளது போட் வாடகை எடுத்தால் பத்தாது. இது ஒரு நாள் மழைக்கு தான் தொடர்ந்து மழை பெய்தால் என்ன ஆகும் என்பது தெரியாது தொலைநோக்கு பார்வையோடு நிரந்தரவு தீர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சர் இதனை செய்ய வேண்டும். 

சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது

உதயநிதி ஸ்டாலின் நேற்று கூட சொல்லி உள்ளார் எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என்று இது சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது

அமரன் திரைப்படம் பாராட்ட கூடியது

இதுவரை நான் இன்னும் அமரன் திரைப்படம் பார்க்கவில்லை.அமரன் திரைப்படம் எப்படி இருந்தாலும் அது பாராட்டப்படக்கூடிய விஷயம். முகுந்தன் அவரின் இறப்பு தான் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு படக் குழுவினருக்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு புறம் வாழ்ந்திருந்தால் ஒரு புறம் பிரச்சனை இருக்கும். திரையிட்டு ஒரு வார காலத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளார்கள் என்ன உண்மை பொய் என்பதை ஆராய்ந்து அதற்குரிய தீர்வை தமிழக அரசு தர வேண்டும்.

விஜயின் புதிய கட்சி

மாநாடு ஒருவர் புதிய கட்சி ஆரம்பித்த நடத்தி விட்டார் என்ற காரணத்தால் தான் மற்ற கட்சிகள் தேர்தலுக்கு இப்போதே வியூகங்கள் அமைத்து பணிகள் தொடங்குகிறார்கள் என்பது தவறான ஒன்று. தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்குவது இயல்பான ஒன்று தான். அந்த வகையில் தேமுதிக கட்சி பணிகளை தொடங்கியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget