Thirumavalavan MP: சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு
Thirumavalavan MP: வடமாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் சமூக பதற்றத்தினை ஏற்படுத்த பா.ஜ.க. முயல்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan MP: வடமாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் சமூக பதற்றத்தினை ஏற்படுத்த பா.ஜ.க. முயல்வதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை வி.சி.க. தலைவரும். எம்.பி.யுமான திருமாவளவன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது “தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீர் குலைக்க பா.ஜ.க. தொடர்ந்து முயன்று வருகிறது. திமுக அரசுக்கு இதன் மூலம் நெருக்கடி கொடுத்து, சமூக பதற்றத்தினை ஏற்படுத்தி ஆதாயம் தேட பாஜக நினைக்கிறது.
வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே யுக்தியை தமிழ்நாட்டிலும் பாஜக கடைபிடித்து வருகிறது. இதன் வெளிப்பாடு தான் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசுவது, அம்பேத்கருக்கு காவி உடை உடுத்தி திருநீர் அணிந்து அவரை அவமதிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாஜகவினரும் சங்பரிவார் அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்” என்று பேசியுள்ளார்.