மேலும் அறிய

S Ve Shekar: அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவிற்கு ஒரு சீட்டு கூட வராது - எஸ்.வி. சேகர் காட்டம்

பாராளுமன்றத்தில் இந்த முறையும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் பாஜக வெற்றி பெறும்.

திரைப்பட நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர், வழக்குகளை தீர்த்து வைக்கும் திருத்தலமாக  பிரசித்தி பெற்று விளங்கும் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்வி சேகர்,

ஒவ்வொரு முறையும் நம்பிக்கை இல்லாத தீர்மானம் வரும் பொழுது மோடி அரசை குறை சொல்லணும்னு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அந்த ஒன்று சேர்ந்திருக்கிற வார்த்தையை பெரிய கேள்வி குறி. இன்னவரைக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாரும் ஒருமித்த கருத்தில் ஒன்று சேரவே இல்லை. அவர்கள் வந்து குறைகளை பாராளுமன்ற புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள். எண்ணிக்கையின் மூலமாகவும் மோடி அவர்கள் இன்று பதில் சொல்லப் போகிறார்கள.  பிறகு பார்த்தால் மக்கள் மக்களுடைய நம்பிக்கை அவர்தான் வெற்றி பெறுவார். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் இந்த முறையும் மிகப்பெரிய தோல்வியை தான் அடையும்

ஏதோ கிழசிங்கம் 

தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும். அதை ஒன்றும் செய்ய முடியாது. தலைமைக்கு நடைபயணம் போகவே பஸ்ஸில் இடமில்லை, அப்படிப்பட்ட நடைபயணம் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோமீட்டர் நடக்கிறார் அதுவே அவருக்கு முடியவில்லை, சிங்கம் என்று அவரே சொல்கிறார். ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் ஏதோ கிழசிங்கம் ஆன மாதிரி தெரிகிறது நமக்கு, அதனால் இந்த நடை பயணத்தினால் ஒன்றும் நடக்காது, அண்ணாமலை என்பது அரசியல் பூஜ்ஜியம், தமிழ்நாட்டில் பொருத்தவரைக்கும் பாஜகவில் குறைந்தது பத்து வருடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தால்தான் பாஜக உடைய ஐடியாலஜி தெரியவரும், எதுவுமே தெரியாமல் படக்கு என்று யாரோ ஒருவரை  சந்தோஷப்படுத்தி,அந்த நபர் இவரை சந்தோஷப்படுத்தி, திடுக்கென்று, இந்த பதவியை கொடுத்திருக்கிறார்கள்.

அடிமட்ட தொண்டர்கள் கூட

இதனால் பாஜகவுக்கு தான் நஷ்டம் ஏற்படுமே தவிர, அண்ணாமலைக்கு பெரிய லாபம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. டெல்லியில் ஆட்சிக்கு பிஜேபி வரும், தமிழ்நாட்டினுடைய உதவிய இருக்காது, அண்ணாமலை இருக்கின்ற வரையில், தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு சீட்டு கூட பெறாது வாய்ப்பே கிடையாது, ஏனென்றால் அண்ணாமலையை பொருத்தவரைக்கும் அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது மாதிரியே அவர் பேசி வருகிறார். அதிமுக கூட்டணி தான் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் அந்த பலத்தை புரிந்து கொள்ள வேண்டும், இவர் நமது நண்பர் என்றவுடன் அவர் மீது காரிகாரி துப்பிக் கொண்டிருந்தால் எப்படி நட்பு இருக்கும்,  அண்ணாமலை இருக்கிற வரைக்கும் அதிமுகவினுடைய ஒரு ஓட்டு கூட பாஜக பக்கம் விழாது, பாஜகவில் இருப்பவர்கள் மோடிக்காகவும் அமித் ஷாக்காகவும் அவர்கள் அந்த கூட்டணி தர்மத்தை மதித்தாலும், என்றைக்கு அண்ணாமலை ஜெயலலிதா அவர்களை பற்றி தவறாக பேசினாரோ அதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் அடிமட்ட தொண்டர்கள் கூட அண்ணாமலையை மன்னிக்க தயாராக இல்லை.

ரஜினி அதை பெரிதா

சூப்பர் ஸ்டார் பட்டமே  தமிழ்நாட்டில் முதல் முதலில் தியாகராஜ பாகவதருக்கு தான் இருந்தது அவர் கோபித்துக் கொண்டாரா, இப்போது ரஜினி கோபித்துக் கொள்கிறாரா, ரஜினி இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், ரஜினியை பொறுத்த வரைக்கும் ரஜினியுடைய குரலை முதல் முதலாக அபூர்வராகங்களின் போது பட ரிலீசுக்கு முன்னாடி என்னுடைய ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு வந்து ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து ஆல் இந்தியா ரேடியோவில், போட்ட அன்றிலிருந்து ரஜினி எனக்கு பழக்கம், ரஜினியை வைத்து மற்றவர்கள் பேசுகிறார்களே,தவிர ரஜினி அதை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது, அவர் என்றைக்கு என்னுடைய படம் சரியாக போகவில்லையோ அன்றைக்கு விலகிக் கொள்கிறேன் என்கிறார்.

ரஜினி ஏன் கவலைப்பட வேண்டும்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து அடுத்தது விஜய் தான் கவலைப்பட வேண்டும், ரஜினி ஏன் கவலைப்பட வேண்டும். நமக்கு அடுத்தது தானே, அதனால ரஜினியை பொருத்த வரையில் ரஜினி இந்த மாதிரியான சின்ன விஷயங்களுக்கெல்லாம் போக கூடியவர் அல்ல, நாளைக்கு விஜய்யை பார்த்தால் ஆல் தி பெஸ்ட் விஜய் அந்த பட்டத்தை பெறுவதற்கு தகுதியானவர் அவரே சொல்லக்கூடியவர்.அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர் தான் ரஜினி எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Embed widget