Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே பள்ளிக்கல்விக்கான நிதி தரப்படும் என்றார், இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை முடிந்தால் அழித்து பாருங்கள் என்று பாஜகவின் எச்.ராஜா சவால் விட்ட நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் கருத்து:
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே பள்ளிக்கல்விக்கான நிதி தரப்படும் என்றார், இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்து திணிப்பு என்று தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட போரட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள ஹிந்தி எழுத்துகளை கருப்பு மை வைத்து அழித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
எச்.ராஜா கருத்து:
இந்த நிலையில் திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். "ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த ஸ்கூலுக்கு போங்க. திமுகவில் மொத்தம் 48 சிபிஎஸ்இ ஸ்கூல்கள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த ஸ்கூல்களில் ஹிந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள். முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!" என எச்.ராஜா காட்டமாக பேசியிருந்தார்.
சு.வெங்கடேசன் பதிலடி:
எச்.ராஜாவின் கருத்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை. என்று எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 25, 2025
ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.
சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.
காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.
அது தான் அறிவுடமை.#மொழி_சமத்துவம்… pic.twitter.com/C3rnuQOTXv
இதையும் படிங்க: Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

