MK STALIN: திமுகவை ஒழிக்க புது புது யுக்தி... ஆனா ஒரு காலமும் நடக்காது- பாஜகவிற்கு எதிராக இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
நமது எதிரிகள் திமுகவை ஒழிப்பதற்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்று பல்வேறு ஆயுதங்களால் நம்மளை மிரட்டி பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏராளமான மக்களின் ஓட்டுக்கள் பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் திருத்த பணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திருவரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டி அவர்களின் மகன் திருமண விழாவை நடத்தி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பழனியாண்டிக்கும் இந்த கழகத்திற்கு உள்ள உறவு இப்போது ஏற்பட்டது இல்லை. திருச்சியை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றியவர் பழனியாண்டி என பாராட்டி பேசினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,
SIR க்கு எதிராக போராட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கும் வகையில் உடன் பிறப்பே வா என்று நிகழ்வை நடத்தி வருகிறேன். தற்போது வரை 80 தொகுதி முடித்துள்ளேன். இது எனக்கு புது புத்துணர்ச்சியை தருகிறது . இயக்கம் என்று சொன்னால் நமக்கு ஓய்வே இல்லை என்று சொல்வதுதான் இயக்கம். இப்படி அனைவரும் சுறுசுறுப்பாக தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதால்தான் நமது கட்சி கம்பீரமாக இன்றளவும் நிலைத்து கொண்டிருக்கிறது. SIR எதிராக தான் கடந்த சில காலமாக பிரச்சனை நீடித்து வருகிறது. இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன்.
நமது எதிரிகள் நம்மளை ஒழிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் பல்வேறு புதுப் புது யுத்திகளை முன்னிறுத்தி வருகிறார்கள். வருமான வரித்துறையை ஏவிவிட்டார்கள். அமலாக்கத்துறை, சிபிஐ போன்று பல்வேறு ஆயுதங்களால் நம்மளை மிரட்டி பார்த்தார்கள். தற்போது SIR என்கிற ஆயுத்தத்தை எடுத்து திமுகவை இதன் மூலமாகத்தான் அழிக்க முடியும் என எடுத்துள்ளார். வேறு மாநிலங்களில் வேண்டும் என்றால் எடுபடலாம். ஆனால் தமிழகத்தில் திமுகவை ஒழிக்க ஒரு காலமும் நடக்காது.
திமுகவை அழிக்க திட்டம்
SIRக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளோம். நாம் ஆர்ப்பாட்டம் நடத்துகிற தினத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது அதிமுக, உங்களுக்கு இதில் அக்கறை இருக்கிறது, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால் முன் கூட்டியே மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இப்போது திடீரென மனு தாக்கல் செய்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். SIR'ஐ தற்போது அதிமுக ஆதரித்து கொண்டுள்ளது.
பாஜக , தேர்தல் ஆணையமும் எதை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினருக்கு துணிச்சல் இல்லை. இந்த வழக்கில் அதிமுக இணைய மனு தாக்கல் செய்திருப்பது கபட நாடகம் நடத்த திட்டமிடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.





















