பஞ்சாயத்து முடிஞ்சது போங்க! இபிஎஸ்-க்கு சமாதான கொடி காட்டிய செங்கோட்டையன்: நடந்தது என்ன?
Sengottaiyan- Edappadi Palaniswami: கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போக்கை எடுத்து புயலை கிளப்பி வந்த செங்கோட்டையன், தற்போது சமாதனமாகியுள்ளார்.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு எதிரான போக்கை எடுத்து வந்த நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சேர்த்து அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்து குறிப்பு தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் இபிஎஸ் மோதல்:
அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பாக, விவசாயிகள் நன்றிகள் தெரிவிக்கும் அதிமுக விழாவில், அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இல்லாத இருந்ததும் எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் இருந்ததும், அதிமுகவினருக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு வெளிப்படையாகவே, இபிஎஸ்-க்கு எதிர்ப்பை பதிவு செய்தார் செங்கோட்டையன்.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வந்ததை பார்க்க முடிந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இபிஎஸ் நடத்தும் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பது, சட்டசபையில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தாலும், செங்கோட்டையன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். மேலும், இபிஎஸ் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களை நடத்தினாலும், அதை புறக்கணிப்பது என இபிஎஸ்-க்கு, செங்கோட்டையன் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார்.
உள் நுழைந்த பாஜக
இந்நிலையில்தான் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்து, பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைத்து வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வந்தது.
ஆனால், ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டவர்களை வைத்து பாஜக கூட்டணியை அமைக்க முடியாது என்று உணர்ந்த பாஜக, செங்கோட்டையனை வைத்து காய் நகர்த்தியது. அதற்கும் செங்கோட்டையனும் வலுவாக உதவி செய்தததாகவே பேசப்பட்டு வந்தது.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற இபிஎஸ், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். அதனை தொடர்ந்து செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இபிஎஸ் கூட்டணிக்கு உடன்படவில்லை என்றால் , கட்சியை பிரித்து செங்கோட்டையன் தலைமையில் உருவாக்கலாம் என அவருக்கு ஆசை காட்டியதாகவும், கூட்டணி அமைந்தால் சில் ஆஃபர்களை தருவதாகவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, ஏற்றார்போல செங்கோட்டையனும் செயல்பட்டார்.
இந்நிலையில்தான், பாஜகவின் அழுத்தத்திற்கும், உடகட்சியினர் அழுத்தத்திற்கும் சாய்ந்து கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அடுத்த வருடம், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில். சில தினங்களுக்கு முன்பு, சென்னை வந்த அமித்ஷா, அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்து விட்டு சென்றார். இந்நிலையில்தான், தற்போது பாஜக-அதிமுக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, இபிஎஸ் உடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார் செங்கோட்டையன்.
சமாதனமான செங்கோட்டையன்
இன்று அம்பேத்கர் பிறந்த நாளில் , அவரை நினைவு கூர்ந்து , செங்கோட்டையன் , எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இபிஎஸ் இருக்கும் படத்தையும் பதிவிட்டு, அவரது புகைப்படத்தைவிட பெரிதாக போட்டிருக்கிறார்.
சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியை வெளிப்படையாகவே தவிர்த்து வந்த செங்கோட்டையன், தற்போது வெளிப்படையாக , இருவரும் இருக்கும் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து பதிவிட்டுருப்பதன் மூலம் சமாதானம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
1/3 #அண்ணல் #அம்பேத்கர் பிறந்தநாளை போற்றி வணங்குவோம் .
— கே.ஏ.செங்கோட்டையன் - Say No To Drugs & DMK (@KASenkottaiyan) April 14, 2025
ஆயிரமாயிர ஆண்டுகளாய்
அடிமையாக்கினாரை-அதிரச் செய்தார்
விழுகிற வீழ்கிற ஆடுகளாய்
மடமை செய்தோரை-
மிரளச் செய்தார்
அதிரடி படைதிரட்டி
அறிவாயுத நிதிபுரட்டி-நம்
அடிமைத்தன மறுத்தார் . pic.twitter.com/Y55FqNk9Ny





















