மேலும் அறிய
Advertisement
ரஷ்யா போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கோரிக்கை
’’உக்ரைன் - ரஷ்யா போர் பிரச்சினையில் இந்தியாவுடைய நிலையை தெளிவாகப் பார்க்கிறேன் மௌனம் தான். எந்த உலக நாடுகளாக இருந்தாலும் சரி ஒரு போர் வருவதை யாரும் விரும்பமாட்டார்கள்’’
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் விடையாற்றி உற்சவம் புஷ்பப் பல்லக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் காஞ்சிபுரம் வருகை தந்தார். காஞ்சிபுரம் தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காஞ்சி சங்கர மடம், காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், தேவேந்திர குலத்தினர் நன்றி உடையவர்கள், நன்றி உடையதன் அடிப்படையிலேயே பாரத பிரதமர் அவர்களால் தேவேந்திரகுல வேளாளர்களின் அரசாணை கொடுத்ததின் அடிப்படையில் நன்றி விசுவாசமாக 80% விழுக்காடுகள் இம்முறை பிஜேபிக்கு வாக்களித்திருப்பதாகவும், அதுபோல் யார் தேவேந்திர குல மக்களுக்கு நன்மை செய்தாலும் அதற்கு விசுவாசமாக நடப்பது தேவேந்திரகுல வேளாளர்களின் நிலை, அதன் அடிப்படையிலேயே இன்றைக்கு தமிழகத்தில் பிஜேபி னுடைய நிலை உயர்ந்து இருக்கிறது என்றால் குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும்,
ஆளும் கட்சி என்று சொல்லும் பொழுது எப்படி வெற்றி பெற்றார்கள் என்று பத்திரிகைகளுக்கெல்லாம் தெரியும். விமர்சனங்களை நிறைய பார்த்திருப்பீர்கள், எந்த அடிப்படையில் வெற்றி பெற்றார்கள், மக்கள்தான் ஓட்டு போட்டார்களா, அவர்களாக ஓட்டுப் போட்டார்களா, அதிகாரிகள் ஓட்டு போட்டார்களா, என்று அவர்களுக்குத்தான் தெரியும், ஒட்டுமொத்த மக்களுடைய கருத்து. திமுக 90% வெற்றி பெறுவார்கள் என்று அப்பொழுதே மீடியாக்களில் சொன்னேன் காரணம் ஆளும் கட்சி அவர்கள் கையில் எல்லாமே இருக்கிறது அதனால் ஜெயித்து விட்டார்கள்.
மக்களுடைய எதிர்பார்ப்புகள் அதிகம் அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். திமுக பட்டியல் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ளாது,அண்ணா திமுகவும் ஏற்றுக்கொள்ளாது, இது பாரதப் பிரதமர் அவர்களால் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளப்படும் செய்யப்படும், எந்தக் கட்சியுமே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்காக யாரும் பரிந்துரை செய்வதும் கிடையாது, ஆதரவும் கொடுக்க முடியாது, ஆதரவு திரட்டும் வண்ணம் மற்ற கட்சிகளின் தலைவர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன் நிச்சயமாக சந்திப்பேன் கோரிக்கை வைப்போம் கொடுத்தால் பார்ப்போம் இல்லாவிட்டால் மத்திய அரசிடம் போராடிப் பெற்றுக் கொள்வோம்.
உக்ரைன் - ரஷ்யா போர் பிரச்சினையில் இந்தியாவுடைய நிலையை தெளிவாகப் பார்க்கிறேன் மௌனம் தான். எந்த உலக நாடுகளாக இருந்தாலும் சரி ஒரு போர் வருவதை யாரும் விரும்பமாட்டார்கள். யாரும் உயிர்த்தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ரஷ்ய அதிபர் எந்த அடிப்படையில் அவருடைய நாட்டினுடைய கொள்கையின் அடிப்படையிலா அல்லது உக்ரேன் நாட்டினுடைய எதிர்ப்பு அடிப்படையிலேயே சண்டை செய்வார்கள் என்று தெரியவில்லை, ஆனால் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என ஜான் பாண்டியன் தெரிவித்தார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion