Aiadmk: ஜெயலலிதாவின் ஸ்பெஷல் பதவியை பறித்து அதிமுகவில் தீர்மானம்! - முன்மொழிந்த இபிஎஸ்
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற விதியை இந்தப் பொதுக்குழுவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் பேசி பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் கே.பி.முனுசாமி பொதுக்குழுவில் 16 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஏக மனதுடன் நிறைவேற்றி தர வேண்டும் என்றும் முன் மொழிந்தார். அவருக்கு பின்பு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த 16 தீர்மானங்களையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று முன் மொழிந்தார். அதிமுக பொதுக்குழுவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று விதியை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
#BREAKING | கட்டபொம்மன் பிறந்த மண்ணில்தான் எட்டப்பனும் பிறக்கிறார்- ஆர்.பி.உதயக்குமார்https://t.co/wupaoCQKa2 | #OPSvsEPS #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami pic.twitter.com/o4sv2T7NKz
— ABP Nadu (@abpnadu) July 11, 2022
பொதுக்குழு வழக்கும்..பிரச்னையும்..
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவந்த நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் காலியாக விடப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ், மற்றும் ஈபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்தது.
இதனையடுத்து தற்காலிகப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ம் தேதி தொடங்கியது. ஆனால், பொதுக்குழுத் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டு அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டத்தில், ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவை விட்டே நீக்கப்படலாம் என்றும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று பரபரப்புத் தகவல்கள் வெளியான நிலையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது.
இதனையடுத்து சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கானது கடந்த 7ம் தேதி மற்றும் 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரண்டு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று கூறியதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதிகள் சொல்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு 2,665 உறுப்பினர்களில் 2,190 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் 2,432 உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து முடிவெட்வுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.இந்தச் சூழலில் இன்று காலை நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

