மேலும் அறிய

திமுகவில் கொங்கு தளபதிகளாக தங்கமணி, வேலுமணி.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- இபிஎஸ் ஷாக்

தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதலால் முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறி வரும் நிலையில், தங்கமணி மற்றும் வேலுமணி திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தோல்வி- அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், திமுக - அதிமுகவிற்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 10 எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில், முதல் தேர்வாக தவெகவிற்கு இருந்தது அதிமுகவின் ஆதரவு, அந்த வகையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் வகையில் தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால்  திடீரென காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தது.

தவெகவிற்கு பல்டி அடிக்கும் அதிமுக நிர்வாகிகள்

இதனால் அதிமுகவின் ஆதரவை நிராகரித்த விஜய், மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அதிலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இபிஎஸ்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் 32 பேரின் பதவியை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி, இதனையடுத்து இரு தரப்பிற்கும் சமாதானம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் 21 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பறிக்கப்பட்ட பதவியானது வழங்கப்படவில்லை. அதே நேரம் புதிய நிர்வாகிகள் அறிவித்த நிலையில், அந்த நிர்வாகிகள் அந்த அந்த மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஒதுங்கும் மூத்த நிர்வாகிகள்- திமுகவின் செம பிளான்

இதனால் கோவையில் எஸ்.பி.வேலுமணி, நாமக்கல்லில் தங்கமணி, விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எந்தவித கட்சி நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றனர். இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுக அல்லது தவெகவில் இணையலாமா.? அல்லது சில காலம் அமைதி காக்கலாம் என ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவை பொறுத்தவரை தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலமாக உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் மற்றும் மோசமான நிலையில் உள்ளது. அந்த வகையில் செந்தில் பாலாஜியை மட்டும் திமுக நம்பி  உள்ளது. எனவே கொங்கு மண்டலத்தை பலப்படுத்தும் வகையில் அதிமுக கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள தங்கமணி மற்றும் வேலுமணியை திமுகவில் இணைய தூது விட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி திட்டம் என்ன.?

அந்த வகையில் திமுகவில் இணையும் பட்சத்தில் திமுக கோவை மண்டல பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணியையும், நாமக்கல் மண்டல பொறுப்பாளாரக தங்கமணியையும் நியமிக்க தயார் என தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆஃபரை ஏற்பதா.? அல்லது நிராகரிப்பதா.? என எந்த முடிவும் எடுக்காமல் தங்கமணி மற்றும் வேலுமணி ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த தகவலால் அதிமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் யார் போனாலும் போகட்டும் என இபிஎஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் வெளியிட்ட பதிவில், தங்கமணியிடம், வேலுமணியோ, அதிமுகவை விட்டு எங்கும் செல்வதாக இல்லை.  மிதுன், வெங்கடேஷ், சசி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் குடும்ப ஆலோசனை குழு மற்றும் Pramanya குழுவினர் பரப்பும் பொய் செய்தி இது.  இவர்களையும் விரட்டி விட்டு விட்டால், திமுகவோடு கூட்டணி வைக்க இடைஞ்சல் இல்லாமல் இருக்கும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என தெரிவித்துள்ளார். 

விஜயபாஸ்கருக்கு ரெட் சிக்னல்

இந்த நிலையில் தான்  முன்னாள் அமைச்சர் சி.வி.விஜயபாஸ்கர் திமுகவில் இணைய தயார் என ஏற்கனவே திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் மெய்யநாதன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக உள்ள செல்லபாண்டியும் திமுகவில் விஜயபாஸ்கரை இணைத்தால் தனது ஆதரவாளரோடு கட்சியில் இருந்து விலகுவேன் என திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளார். இதனால் விஜயபாஸ்கரை திமுகவில் இணைப்பதற்கான சூழ்நிலை தற்போது உருவாகத நிலையானது நீடித்து வருகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget