OPS, EPS : ஒரே ஸ்டார் ஓட்டல்! ஆனால் தனித்தனி ரூம்! காத்திருக்கும் இபிஎஸ் -ஓபிஎஸ் சென்னையில் திரெளபதி!
குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரே ஹோட்டலுக்கு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவரின் பா.ஜ.க. வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு பெறுவதற்காக அவர் இன்று சென்னை வந்தார். அவருக்கு நேரில் வந்து ஆதரவு அளிக்குமாறு பா.ஜ.க. சார்பில் அ.தி.மு.க.வின் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர்களின் அழைப்பை ஏற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் வேறு வேறு அறையில் காத்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே ஹோட்டலில் வேறு, வேறு அறையில் காத்திருப்பது அவர்களது ஆதரவாளர்கள் மத்தியிலும், ஹோட்டலுக்கு வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஹோட்டலில் உள்ள நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., - பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நேரில் பங்கேற்றன. அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் திரௌபதி முர்முவுக்கு முதலில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அவர் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார். பின்னர், திரௌபதி முர்முவை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் விழா மேடைக்கு நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
வரும் 18-ந் தேதி குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு சென்னைக்கு நேரில் வந்தார். அப்போது, அவர் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று தி.மு.க. கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரினார். அவருக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.
மேலும் படிக்க : 'அதிமுக ஒருங்கிணைப்பாளராக...' அழுத்திச் சொன்ன ஓபிஎஸ்! திரௌபதி வரவேற்பில் ADMK விவகாரம்!
மேலும் படிக்க : அதிமுகவை கைப்பற்ற 4 பேர் முயற்சி; உட்கட்சி மோதல் ஆரம்பம்... என்ன நடக்கிறது புதுவை அதிமுகவில்...?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்