TVK Vijay : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்! குஷியில் EPS, விஜய்
Prasanth kishor : பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தவெக தலைவர் விஜயை பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் ஆதவ் அர்ஜுனா தான் என்றும் இதன் பின்னணியில் வேறொரு மெகா ப்ளான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2026 தேர்தல்:
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக களமிறங்கியுள்ளன. ஏற்கனவே அதிமுகவுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தவெக உடன் ஒப்பந்தம் செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
2021 சட்ட மன்ற தேர்தலின் போது ஆதவ் அர்ஜுனா தான் பிரசாந்த் கிஷோரை திமுகவுக்கு வேலை பார்க்க அழைத்து வந்ததாக அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில் விசிகவில் இருந்து விலகிய பின் ஆதவ் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் அவர் தான் ஐபேக் நிறுவனத்துடன் அதிமுக ஒப்பந்தம் செய்ய காரணமாய் அமைந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னாவில் ஆதவ் அர்ஜுனா பிரசாந்த் கிஷோரை நேரடியாக சந்தித்து ஆலோசித்தார். அப்போது கூட அதிமுகவுக்காக தான் இந்த சந்திப்பு என பெரிதும் பேசப்பட்டது.ஆனால் பெரிய ட்விஸ்டாக ஆதவ் விஜய்யை சந்தித்து தவெகவில் அதிரடியாக இனைந்தார். இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் விஜய்யின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து இதன் பின்னணியில் மெகா ப்ளான் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. 2021 தேர்தலில் திமுகவுக்காக வேலை செய்த பிரசாந்த் கிஷோர் தனது சொந்த கட்சி தொடங்கிய பிறகு தேர்தல் ஆலோசகராக இனி தொடரமாட்டேன் என அறிவித்தார். எனினும் அவரது ஐபேக் நிறுவனம் ஆக்டிவாக வேலை பார்த்து வந்தது. இந்நிலையில் தான் இந்த தேர்தலுக்கு அதிமுகவுடன் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தமானது.
இதையும் படிங்க: Vijay-Prashant Kishor: விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: ஜான் ஆரோக்யசாமிக்கு ஸ்கெட்சா: வேலையை ஆரம்பித்த ஆதவ்.!
திமுக பலம் மற்றும் பலவீனம்:
திமுகவுடன் இணைந்து வேலை பார்த்துள்ளதால் திமுகவின் பலம் பலவீணங்களை நன்கறிந்தவர் என்ற முறையில், திமுகவின் பலமே அதன் கூட்டணி தான் என்கிறாராம் பிரசாந்த் கிஷோர். ஆனால் தற்போதைய நிலையில் அதிமுகவிடம் கூட்டணி பலம் இல்லாததால் வலிமை இல்லாத கட்சியாக இருப்பதாக கருதியுள்ளார். அதனால் முதலில் அதிமுகவின் கூட்டணியை பலப்படுத்த முடிவு செய்த பிரசாந்த் கிஷோர், தவெகவை தேர்வு செய்துள்ளார்.
மேலும் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே காங்கிரஸில் இணையலாமா என பிரசாந்த் கிஷோரிடம் விஜய் ஆலோசனை கேட்டதாகவும் அப்போது உங்களது பலம் உங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் தனியாக கட்சி தொடங்கலாம் என அட்வைஸ் கொடுத்துள்ளாராம் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோரை சந்தித்த ஆதவ் அர்ஜுனாவிடம் முதலில் விஜய்யிடம் நெருக்கமாக கூறியுள்ளார் பிரசாந்த். அதன் அடிப்படையில் தான் ஆதவ் தவெகவில் இணைந்து காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.
முதலில் விஜய்யுடன் நெருக்கமாகி அவரது நம்பிக்கையை பெற்று பின்னர் அதிமுக கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வருவது தான் ஆதவ்க்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ள முக்கிய அசைன்மெண்ட் என கூறப்படுகிறது. அதிமுக தவெக கூட்டணி சாத்தியமானால் இதை பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் சிலர் இந்த கூட்டணிக்குள் இணைய வாய்ப்புள்ளதாகவும் கருதுகிறாரார் பிரசாந்த் கிஷோர்.
இப்படி பெரிய ப்ளானை வைத்துக்கொண்டு தான் நேற்று விஜய்யின் பனையூர் இல்லத்தில் சுமார் 2.30 மணி நேரம் விஜய் பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் முதல் பாதியில், விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் விஜய், பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுனா மற்றும் தனிமையில் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரசாந்த் கிஷோர் விஜய்யிடம் ஒரு முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். அதன்படி தவெகவின் பலத்தை கணிக்க அதன் கூட்டணி நிலைப்பாடு குறித்து தான் எதிர்க்கட்சிகளும் செய்தியாளர்களும் உங்களிடம் கேள்வி எழுப்புவார்கள். அப்போது அதிமுக கூட்டணி குறித்து வாய் திறக்க வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் விஜய்யிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடியுடன் சந்திப்பு:
இதனையடுத்து நேற்றைய தினமே பிரசாந்த் கிஷோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ரகசிய மீட்டிங் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ஆதவின் முதல் சந்திப்பான அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கும் காரணமாய் அமைந்தவர் பிரசாந்த் கிஷோர் தானாம். ஆதவிடம் இதுபோன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக்கூறி அதில் விஜய் திருமாவை அழைக்க சொல்லியும், அந்த மேடையை ஆதவ் விஜய்யின் உறவுக்கு தொடக்கப் புள்ளி வைத்ததும் பிரசாந்த் கிஷோர் தானாம்.
இப்படி இன்ச் பை இன்சாக பார்த்து பார்த்து காய்நகர்த்தி எப்படியாவது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தவெக கூட்டணியை ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என முடிவுசெய்துவிட்டார் கேம் சேஞ்சர் பிரசாந்த் கிஷோர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

