Vijay-Prashant Kishor: விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: ஜான் ஆரோக்யசாமிக்கு ஸ்கெட்சா: வேலையை ஆரம்பித்த ஆதவ்.!
Vijay Prashant Kishor Meeting: சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் , தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிசோரை சந்திக்க வைத்திருக்கிறார், ஆதவ் அர்ஜூனா.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தேர்தல் வியூக வகுப்பாளராக ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி இருக்கும் நிலையில், இந்திய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளர்களில் மிகவும் புகழ்பெற்ற பிரசாந்த் கிஷோரை , தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். இது, ஆதவ் ஆர்ஜூனாவின் ஏற்பாடுதான் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. பிரசாத் கிசோரை, திடீரென விஜய் சந்திக்க காரணம் என்ன? ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலைகளா? ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ விவகாரம் காரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன நிலையில், அதுகுறித்து பார்ப்போம்.
கட்சிகளை வலுப்படுத்தும் விஜய்:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதற்கான தீவிர வேலைகளில் இறங்க ஆரம்பித்திவிட்டார், தவெக தலைவர் விஜய். கட்சிகளை வலுப்படுத்தும் வகையில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளை ,120 மாவட்டங்களாக பிரித்து, அதற்கான மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, விசிக கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பதவியையும் வழங்கினார்.
அப்போதே கட்சியில் சில சலசலப்பு ஏற்பட்டது, ஏற்கனவே தவெக கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கும் நிலையில், வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூக அமைப்பை வைத்து நடத்தும் ஆதவ் அர்ஜூனாவுக்கு, தவெகவில் பொறுப்பு கொடுத்தது ஏன், ஜான் ஆரோக்கியசாமிக்கு ஏதேனும் இடையூறை ஏற்படுத்துமா என்றும் கேள்விகள் எழுந்தன.
Also Read: 5வது பட்டியலை வெளியிட்ட விஜய்.! புதிய 19 தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்...
ஆனந்திற்கு எதிராக ஜான் ஆரோக்கியசாமி

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகி, தவெக கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் , கட்சியின் எல்லா தருணங்களிலும், நிகழ்வுகளிலும் புஸ்ஸி ஆனந்தே முன்னிலைப் படுத்தப்படுகிறார் என்றும், அவர்தான் தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்றும், சாதி பார்த்து நிர்வாகிகளை நியமிக்கும் பணியில், புஸ்ஸி ஆனந்த் ஈடுபடுகிறார் என்றும், சிலரிடம் பணம் வாங்கியதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார், ஜான் ஆரோக்கியசாமி. விஜய் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்படும் புஸ்ஸி ஆனந்த் மீது, கடுமையான குற்றச்சாட்டுகளை ஜான் ஆரோக்கியசாமி வைத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ் அர்ஜூனா:

இந்நிலையில்தான், தேர்தல் வியூகங்களில் இந்திய அளவில் புகழ்பெற்ற , மோடி, ஜெகன் மோகன் ரெட்டி, ஸ்டாலின் என பலருக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த கிஷோரை , இன்று தனது வீட்டில் விஜய் சந்தித்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமே , ஆதவ் அர்ஜூனாவின் ஏற்பாடுதான் என்றும் கூறப்படுகிறது.
பிரசாந்த கிசோர் , ஐபாக் என்கிற நிறுவனத்தை வைத்து தேர்தல் வியூக பணியை, சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டு, பீகார் அரசியலுகுள் நுழைந்துவிட்டார்.
இந்த தருணத்தில் குறிப்பிடத்தக்கது வேண்டிய விடயம் என்னவென்றால், பிரசாந்த் கிஷோரின் அரசியலுக்கு, ஆதவ் அர்ஜூனா நிதியுதவி அழிப்பதாக கூறப்படுகிறது. அதன் கைமாறாகத்தான், ஆதவ் அழைத்தவுடன் , விஜய்யை சந்திக்க வந்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோர் நேரடியாக, விஜய்க்காக வியூகங்களில் வராவிட்டாலும், தனது அணியில் உள்ள சிலரை விஜய்க்காக அனுப்ப உள்ளாராம். அந்த அணிக்கு , ஆதவ் தலைமை வகிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
Also Read: தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
ஜான் ஆரோக்கியசாமிக்கு ஸ்கெட்ச்?
இந்நிலையில் , தற்போதைய தவெக வியூக வகுப்பாளராக இருக்கிறார், ஜான் ஆரோக்கியசாமி. ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை விட முன்னிலை வகிக்க வேண்டும் என்றும், விஜய்க்கு அடுத்தபடியாக, 2ம் இடத்தில் தான் இருக்கும் வேண்டும் என்றும், தெளிவாக திட்டத்தை போடுகிறார் ஆதவ்.
அதற்குத்தான் பிரசாந்த் கிஷொர் அணியை விஜய் முன் காண்பித்து , மிகப்பெரிய பிம்பத்தை எழுப்புகிறார் ஆதவ். இதன் மூலம் ஜான் ஆரோக்கியசாமியை, பிளான் போட்டு தூக்க திட்டமிட்டிருக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

இன்று ( பிப்.11 ) , சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில், விஜய்- பிரசாந்த கிஷோர் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த சந்திப்பின் போது நடைபெற்ற ஆலோசனையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா , ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட முக்கிய தவெக பொறுப்பாளர்களும் இருந்திருக்கின்றனர்.
அதிமுக-தவெக:
இதில் கவனித்தக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அதிமுகவை சந்திப்பதாக, சில நாட்களாக தகவல்கள் கசிந்து வந்தது. இந்நிலையில், இருவரும் தற்போது விஜய்யுடன் இருப்பதை பார்க்கும் போது, மாற்றுக்கருத்தே இல்லை, இது தவெக-அதிமுக கூட்டணி -க்கான மிகப் பெரிய பிளான் நகர்ந்து செல்வதை உணர முடிகிறது என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இந்நிலையில் , பிரசாந்த் கிஷோர் அணி உள்ளே வந்தால், ஜான் ஆரோக்கியசாமிக்கான இடம் என்ன? அல்லது பிரசாந்த் கிஷோர் -விஜய் இடையிலான சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பா? ஆதவ் திட்டம்தான் என்ன? விஜய்யின் அடுத்த திட்ட்ம்தான் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.





















