PM Modi Exclusive Interview: தனியறையில் இருந்தேன்.. குஜராத் கலவரத்திற்கு பின் முதல் தேர்தல் தருணங்களை பகிர்ந்த மோடி
PM Modi Interview: பிரதமர் நரேந்திர மோடி, ABP நெட்வொர்க்கிற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், 2002 குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் வெற்றியைப் எப்படி தெரிந்து கொண்டேன் என்பதைப் பகிர்ந்தார்.
”தனி அறையில் இருந்தேன்”:
டிசம்பர் 15, 2002 அன்று நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குஜராத் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்திருந்ததாகக் கூறினார். உலக அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த ஆளுமைகளில் ஒருவராக மோடியின் எழுச்சியை வடிவமைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் குறித்து தெரிவித்த பிரதமர் மோடி, "தேர்தல் ஆணையம் என்னை மிகவும் தொந்தரவு செய்தது. ஒவ்வொரு அடியிலும் எனக்கு இடையூறுகளை உருவாக்கியது.
”வழக்கத்தை இன்றும் தொடர்கிறேன்”:
அப்போது வெற்றி பெறுவது கடினம் என்று, சிலர் என்னிடம் சொன்னார்கள். அந்த தருணத்தில் எந்த தொலைபேசி அழைப்பையும் நான் எடுக்கவில்லை. "மதியம் 1.30 மணி இருக்கும். அப்போது வெளியே மத்தளம் அடிக்கும் சத்தம் கேட்டது. அதனால் என்ன விஷயம் என்று ஒருவரைக் கூப்பிட்டு கேட்டேன். கட்சிக்காரர்கள் என்னை வாழ்த்த விரும்புவதாகக் கூறி, கடிதம் ஒன்றைக் கொண்டு வந்தார். அப்போதுதான். முதன் முறையாக முடிவுகள் எனக்குக் கிடைத்தது.
ஒரு நல்ல மாலையையும், ஒரு இனிப்பு பெட்டியையும் வாங்கி வரச் சொன்னேன், எங்கள் வெற்றியைக் கொண்டாடும் முன், கேசுபாய் பட்டேலுக்கு (மோடியின் முன்னோடி) மாலை அணிவிப்பேன். இந்த வழக்கத்தை இன்று வரை தொடர்கிறேன்.
பிரதமராக மோடி:
நான் இன்றும் கருத்துக் கணிப்புகளில் இருந்து விலகியே இருக்கிறேன். தேர்தல் முடிவு நாளில், வெற்றி உறுதியாகும் வரை நான் தனிமையாகவே இருப்பேன் என பிரதமர் தெரிவித்தார்.
2002 குஜராத் கலவரத்தின் வன்முறையைத் தடுக்க அவர் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என பேச்சுகள் எழுந்த நிலையில், அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இந்த தேர்தல்தான், தற்போது மோடியை பிரதமராக அமர வைத்தது என்றும் பேச்சுகள் எழுவதை பார்க்க முடிகிறது.
WATCH | पीएम मोदी की विचारधारा में स्वामी विवेकानंद के विचारों की कितनी छाप है?
— ABP News (@ABPNews) May 28, 2024
PM नरेंद्र मोदी (@narendramodi) का विस्फोटक इंटरव्यू
यहां पढ़ें - https://t.co/BPfhmlmmUA
यहां देखें - https://t.co/rdzuoTx8ni@romanaisarkhan | @SavalRohit | @IamSumanDe#PMModiOnABP… pic.twitter.com/WPAYM4wO3h