மேலும் அறிய
Advertisement
பாமக எம்எல்ஏ பெயர் இருக்கு, விசிக எம்பி பெயர் இல்லை - புறக்கணிக்கப்படுகிறாரா ரவிக்குமார் எம்பி..?
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு விழாவில் எம்பி ரவிக்குமார் பெயர் நீக்கம்.
அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழா
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்வி குழுமத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்து கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஆகியோர் தலைமையில் இன்று துவங்கப்பட உள்ளது.
காணாமல்போன விழுப்புரம் தொகுதி எம்பி பெயர்
இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி ரவிக்குமார் பெயர் நீக்கப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கை இதழில் அதிமுக மற்றும் பாமக வினரின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரை மட்டும் புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எங்களுக்கு அழைப்பிதழ் வரவில்லை
இதுதொடர்பாக விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் தொடர்பை துண்டித்து விட்டார். பின்னர் அவர் உதவியாளர் ரவி கார்த்திகேயனிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறுகையில், இந்த பேச்சு போட்டியானது கல்லூரி சார்பில் நடப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அரசு சார்பில் நடைபெற்ற உள்ளது. என்பது தற்போது தான் எங்களுக்கு தெரிய வந்தது, இருப்பினும் அவர்கள் அச்சடித்த பத்திரிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பெயர் பதிவு செய்யாமல் உள்ளது. இது தொடர்பாக மக்கள் செய்து தொடர்பு அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அவர் நாங்கள் இந்த பத்திரிகையை தயார் செய்யவில்லை, எனவும் மாநில சிறுபான்மை ஆணையம் தான் தயார் செய்தது, எனவும் கூறிவிட்டார் என ரவி கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும் விழா தொடர்பாக எந்த ஒரு அழைப்பும், அழைப்பிதழும் வரவில்லை என தெரிவித்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தற்பொழுது தனி தொகுதியை, பொதுத் தொகுதியாக மாற்றி, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை விழுப்புரத்தில், நாடாளுமன்ற உறுப்பினராக நிற்க வைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது போன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பெயர் நீக்கப்பட்டு இருப்பது விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்
உலகம்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion