மேலும் அறிய

திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது - தமிமுன் அன்சாரி

திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என  மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பான தங்களின் நிலைப்பாட்டின் முடிவுகள் குறித்து ஜூன் 23-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதனை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. 

திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது -  தமிமுன் அன்சாரி

இந்தியாவில் பிடிக்காதவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவி விடுவது அரசியல் ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றம்தான் இறுதி முடிவு  எடுக்கவேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் நெருக்கடி கொடுப்பது மனிதாபிமானமற்ற செயல். திமுகவினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தேவையற்ற விமர்சனங்களை வைப்பது நாகரிகமற்ற செயல் என்று நாங்கள் கருதுகிறோம். 

அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் சொன்ன கருத்தை வரவேற்கிறேன் - பாஜக ஸ்ரீனிவாசன்

திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது -  தமிமுன் அன்சாரி

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மாணவர்களை சந்திக்கிறார். நடிகர் விஜய் இதுவரை அரசியல் கட்சியை தொடங்கவில்லை. கட்சி தொடங்கும்போது அவருடைய அரசியல் சித்தாந்தத்தை தெளிவுப்படுத்த வேண்டும். நடிகர் விஜய் அவருடைய ரசிகர்களை அரசியல் மையப்படுத்த வேண்டும், சினிமாவில் இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. சினிமாவை மட்டுமே மூலகாரணமாக கொண்டிருக்கக் கூடாது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விஜய் சொல்வது நல்ல கருத்து. திராவிட அரசியலையும், தமிழ் தேசிய அரசியலையும் சார்ந்து யார் அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தாலும் அதனை வரவேற்கிறோம்.

IAS Officers Transfer: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்..! யார் யார் மாற்றம்..?

திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது -  தமிமுன் அன்சாரி

திராவிடம் சார்பாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க முடியும். திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது. திராவிட அரசியலையும் தமிழ் தேசிய அரசியலையும் எதிர்ப்பதால்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளது. விஜய் பெரியார, அம்பேத்கர் காமராஜரை பற்றி எல்லாம் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கூறுவது பாரதிய ஜனதாவிற்கு பிடிக்கவில்லை. எனவே, பாரதிய ஜனதா கட்சி நடிகர் விஜயை எதிர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்றார். அப்போது, மாநில செயலாளர் நாகை சையது முபாரக், மாவட்ட செயலாளர் ஹாஜாசலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Adipurush Box Office: நெகட்டிவ் விமர்சனம் இருக்கட்டும்.. 3 நாள்களில் ரூ.340 கோடின்னா சும்மாவா? ஷாக் கொடுக்கும் ஆதிபுருஷ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget