மேலும் அறிய

Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

பொங்கலுக்கு கொடுக்கும் பொருட்களையெல்லாம் புகார் சொல்கிறார்கள்- பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கவே 1000ரூபாயை முதல்வர் கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி.

மதுரையில் 114 கோடி ரூபாய் செலவில் மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில், 2 லட்சத்து 40ஆயிரம் சதுர அடி பரப்பில், 7 தளக்ககளுடன் கருணாநிதி பெயரில், சர்வதே தரத்தில் நுாலகம் அமைக்கப்பட்டு வருகிறது. நூலகம் கட்ட 99 கோடி ரூபாயும், புத்தக கொள்முதல், புத்தகங்களை டிஜிட்டல் வழிக்கு மாற்ற 10 கோடி ரூபாய், தொழில்நுட்ப கருவிகள் வாங்க, 5 கோடி ரூபாய் என 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மூர்த்தி, பொதுப்பணித்துறை  அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு இறுதிகட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில் “தென்னகத்தை அடிப்படையாக வைத்து தான் கலைஞர் நூலகத்தை அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினார். கலைஞர் நூலக கட்டிட பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். கலைஞர் நூலக திப்பு விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். 80 % முகப்பு மற்றும் தோரண வாயில் பணிகளும், குழந்தைகள் பிரிவில் 75 சதவீத பணிகளும், தமிழ்ப்பிரிவு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது. முழுமையாக அனைத்து பத்திரிக்கைகளையும் படிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ளது போன்ற பர்னிச்சர்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கலைஞர் நூலகத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் நூலகம் திறக்கப்படும்” என்றார்.

Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
பொங்கலுக்கு கரும்பு கொடுக்கவில்லை என விவசாயிகள் போராட்டம், குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “பொங்கலுக்கு கரும்பு கொடுத்தால் அரைக்கரும்பு, முழுக்கரும்பு, கால்கரும்பு கொடுப்பதாக புகார் சொல்கிறார்கள். வெல்லம், முந்திரி கொடுத்தாலும் சின்ன முந்திரி, உடைந்துள்ளது, வெல்லம் ஒழுகுகிறது, ஏலக்காய் சிறியதாக உள்ளது என புகார் சொல்கிறார்கள். அதனால் தான் முதல்வர் பொங்கலுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொள்ள 1000 ரூபாய் கொடுத்து உள்ளார். தமிழகத்தில் காலாவதியான 58 டோல்கேட் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஜனவரி 3,4ம் தேதி டெல்லியில் அமைச்சர் நிதின்கட்கரியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இந்தப்பிரச்சினைகள் குறித்து எடுத்து கூற உள்ளேன். கப்பலூர் கிருஷ்ணகிரி டோல்கேட் காலாவதியான டோல்கேட். பல சுங்கச்சாவடிகள் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் 40 % கட்டணம் பெற்றுக்கொள்ள கூறியுள்ளோம். கப்பலூர், கிருஷ்ணகிரி டோல்கேட் குறித்து ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.

Madurai: பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு, ”சாலை பாதுகாப்புக்கு எந்த அமைச்சரும் உட்காந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு கூட்டம் நடத்தியதில்லை. நாங்கள் சாலைப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறோம். சாலை பாதுகாப்புக்கு மத்திய அரசு குறிப்பிட்ட பிளாக் ஸ்பாட் எனப்படும் 1337 இடங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைப்பாதுகாப்பில் தமிழகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டி தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பாராட்டியுள்ளனர்” என பேசினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Embed widget