MGR Statue Vandalised: சென்னையில் சேதப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை.. கொந்தளித்த தொண்டர்கள்.. ஈ.பி.எஸ் கண்டனம்..
சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுகவை தோற்றுவித்தவருமான எம்.ஜி.ஆருக்கு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிலைகள் உள்ளன. சென்னையிலும் ஏராளமான இடங்களில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது.
இந்த நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆரின் சிலையில் இருந்து மூக்குப்பகுதியை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்த அ.தி.மு.க.வினர் உடனடியாக சிலை அருகே குவிந்தனர்.
சென்னை ஜீன்ஸ் செட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது, pic.twitter.com/NFkQLnuUYV
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) September 27, 2022சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. pic.twitter.com/nWnIPDooMy
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2022
இந்தச் செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை சரி செய்யவும், இனி வருங்காலங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2022
இதையடுத்து, தகவலறிந்த ஓ.பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எம்.ஜி.ஆர். சிலை, சேதப்படுத்தப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தையும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், “சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திமுக-வின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மக்களின் இதயக்கனி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை 1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 27, 2022
மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 27, 2022
புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர் குலைக்கவும் நினைக்கும் விஷமிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது மிக்கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
2/2 @AIADMKOfficial
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " அனைத்திந்திய அண்ணா திமுகவின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மக்களின் இதயக்கனி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைக்கும் விஷமிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 27, 2022
இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். (1/2)
மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, தேனாம்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாசிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.