“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு” - அமைச்சர் பொன்முடி விமர்சனம்
போலீஸ் வேடம் போட்டுக் கொண்டிருந்தவர் அரசியலுக்கு வந்து சமூகநீதி, மதகொள்கை பற்றியெல்லாம் தெரியாமல் பேசும் அண்ணாமலை ஒரு செல்லாக்காசு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
Vegetables Price Today: கத்தரிக்காய் கம்மி விலை.. கொத்தவரை கொடூர விலை.. இன்றைய காய்கறி நிலவரம்!
அப்போது அவர் கூறுகையில், இளைஞர்களிடம் சமூக நீதி, சமுதாய சமத்துவ கொள்கைகள், மதச்சார்பற்ற தன்மை வளர வேண்டும் என்பதைத்தான் திராவிட மாடல் ஆட்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. செல்லாத காசை நாம் ஏன் சுண்டிப் போட்டு பார்க்க வேண்டும். அவரெல்லாம் போலீஸ் வேஷம் போட்டவர். தற்போது அரசியலுக்கு வந்து என்னென்னமோ செய்கிறார். அவருக்கு சமூக நீதி, மதக்கொள்கை உள்ளிட்ட எதுவும் தெரியாது.
Chennai: கையிலும் வாயிலும் பரோட்டா! நடிகர் விஜய் அலுவலகத்தில் மர்மமாக உயிரிழந்த ஊழியர்!
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அவருக்கு ஏதேனும் உதவி கிடைக்காதா என்பதற்காக பேசுகிறார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இல்லை என்றால் ஒன்றும் பேச மாட்டார். அதிமுக பாஜகவுடன் இருந்த மாதிரி இருந்தது, தற்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே பெரிய போட்டி உள்ளது. ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா என்ற போட்டிதான் அந்தக் கட்சியில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளார்கள். எந்த பணியும் நடக்கவில்லை. அந்த மாதிரி நடக்காத பணியில் ஒன்றுதான் குத்தாலத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிக்கு கட்டிடம் கட்டித் தரவில்லை என்பது.
நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் பாய்ந்த ரவுடி... தனி ஆளாய் சமாளித்த போலீஸ்.! வைரல் வீடியோ!
இதற்கெல்லாம் விடிவு காலம் வரும் வகையில் தமிழக முதல்வர் உயர்கல்வியை பொற்காலமாக மாற்றுவோம் என்று சொல்லி அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். அதனைத் தொடர்ந்து, திமுகவில் புதிதாக இணைந்த பல்வேறு கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்