நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் பாய்ந்த ரவுடி... தனி ஆளாய் சமாளித்த போலீஸ்.! வைரல் வீடியோ!
கேரளாவில் போலீஸ் எஸ்.ஐ ஒருவரை ரவுடி ஒருவர் கத்தியால் பின்தொடர்ந்து வெட்ட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் போலீஸ் எஸ்.ஐ ஒருவரை ரவுடி ஒருவர் கத்தியால் பின்தொடர்ந்து வெட்ட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், ஆலப்புழா நூரநாடு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் 37 வயதான எஸ்.ஐ வி.ஆர்.அருண்குமார். இவர் ஜீப் ஒன்றில் காவல்நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த போலீஸ் ஜீப்பை ஒருவர் பட்டாக்கத்தியுடன் ஸ்கூட்டரில் துரத்திச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க :11 வயது சிறுமிகளுக்கு அரசியல் பாடம்: பலிகா பஞ்சாயத்து.. இது நாட்டிலேயே முதன்முறை!
பட்டாக்கத்தியுடன் வந்த நபர் நூரநாடு முத்துகாட்டுக்கரை எள்ளும்விளையைச் சேர்ந்த 48 வயதான சுகதன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள பாரா சந்தியில் எஸ்ஐ ரோந்து பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது சுகதன் பட்டாக்கத்தியுடன் துரத்திச் சென்றுள்ளார்.
காவல் ஆய்வாளரை பின்தொடர்ந்து வந்து வெட்டி கொலை செய்ய முயன்ற நபர்..
— Esakki Raja (@rajaviaz) June 17, 2022
பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி#kerala #CCTV pic.twitter.com/mQRJ3fYrSX
இதையடுத்து, இதைப்பார்த்த எஸ்.ஐ வி.ஆர்.அருண்குமார் தான் சென்றுக்கொண்டிருந்த ஜீப்பை ஓரமாக டிரைவரிடம் நிறுத்த சொல்லி, ஜீப்பில் இருந்து இறங்கிய எஸ்.ஐ., அந்த நபரை பார்த்து என்ன என்று கேள்வி எழுப்பினார். ஸ்கூட்டரில் வந்த நபர், தான் கொண்டு வந்த வாளைப் பயன்படுத்தி சரமாரியாக எஸ்.ஐயை சரமாரியாக வெட்ட முயன்றார். அதை தடுக்க முயன்ற எஸ்ஐக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டது. ஆனால் காயங்கள் இருந்தபோதிலும், எஸ்ஐ தாக்கியவர் மீது பாய்ந்து அந்த கத்தியை புடுங்கினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : Rasi Palan Today, June 18: கடகத்துக்கு செலவு..! துலாமுக்கு சிக்கல்..! உங்களுக்கு எப்படி இன்று..?
எஸ்.ஐ வி.ஆர்.அருண்குமார் ஏன் தாக்கப்பட்டார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் சுகதன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாக்கத்தியுடன் ஒருவர் தாக்கியபோதும் எந்தவொரு பயமும் இன்றி பாய்ந்த எஸ்.ஐயை ஐபிஎஸ் அதிகாரிகள் முதற்கொண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்