மேலும் அறிய
Advertisement
Madurai: யாரை நம்பியும் நாங்கள் இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியை சாடியை அமைச்சர் மூர்த்தி
புகழுக்காக தகுதி இல்லாதவர்களுக்கு பட்டா வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் மூர்த்தி காட்டம் !
3000திற்கு மேற்பட்ட பெண்களை திரட்டி பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணிக்கு எதிராக காட்டமாக பேசிய அமைச்சர் மூர்த்தி.
தவறான பிரச்சாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் - அமைச்சர் பி.மூர்த்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை எச்சரிக்கை விடுக்கும் வகையில் தி.மு.க கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாவை முதலமைச்சரும் துணை முதலமைச்சர் வழங்க இருக்கிறார்கள். இதில் எவனும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன், என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிட வேண்டும். நம்முடைய முதலமைச்சர் எது சட்டத்திற்கு உட்பட்டதோ அதன்படி அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் தகுதியுடையவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் துணை முதலமைச்சர் பட்டா வழங்குவார்கள் அதற்கான பணி துவங்கிவிட்டது. பெயருக்காக தன்னுடைய தர்ப்பெயருக்காக தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன், என தவறான பிரச்சாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
நாம் யாரை நம்பியும் இல்லை; நம்மளை நம்பி இருப்பவர்களுக்கு துணையாக இருப்போம்
மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் செய்துவருகிறார். நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்கக் கூடியது தான் நம்முடைய ஆட்சி. கிடைக்காததை கிடைக்கும் என்றும் வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவுகூர்ந்து நீங்கள் நம்பி ஏமாந்து விட வேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத் துறையும் உள்ளது. அரசு அதிகாரிகளும் முழுவீச்சில் பணிகளை செய்து வருகின்றனர். முதலமைச்சர் அவர்களும் துணை முதலமைச்சர் அவர்களும் ஏற்கனவே ஒத்தக்கடையில் நடந்ததைபோல மாநாட்டை போல அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் சொன்னதைப் போல நம்மை யாரை நம்பி இல்லை. நம்மளை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக உறுதுணையாக இருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். எனவே நம்முடைய கழகத்தின் சார்பில் பயனாளிகளை சந்தித்து திட்டங்களை முழுமையாக பெற்று தர உதவ வேண்டும்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TVK: மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion