மேலும் அறிய
தி.மு.க.,வின் பி.எல்.ஓ., ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பது, நிர்வாக சீர்கேடு என - ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு !
தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் பாக முகவர்கள் 2 ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம். - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேச்சு.

ராஜன் செல்லப்பா
Source : whatsapp
மதுரையில் அமைச்சர் மூர்த்தி நடத்திய பிஎல்ஓ 2 ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கலந்து கொண்டனர் - வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு.
அதிமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம், கிழக்கு ஆகிய தொகுதிகளில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ,கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்வி.வி.ஆர்.
ராஜ்சத்யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விண்ணப்பம் செய்ய சொல்லித் தர வேண்டும்.
ராஜன் செல்லப்பா கூறியதாவது...,” தமிழகம் முழுவதும் தற்போது தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நாளையும், நாளை மறுநாள் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பாக முகவர்கள்2 பங்கேற்க வேண்டும். தற்போது பி.எல்.ஒ. பணியில் பணிபுரியும் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. குறிப்பாக காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுய உதவி குழுக்களை நியமித்துள்ளனர். இவர்களுக்கு சரியாக பயிற்சி அளிக்கப்படவில்லை, சரியான பயிற்சி இல்லாதால் திமுக சாதகமாக பயன்படுத்துகிறது. ஆகவே பாக முகவர்கள் 2 தற்போது நடைபெறும் முகாமில் பங்கேற்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும்.
நிர்வாக சீர்கேடுக்கு சான்று
இன்றைக்கு எடப்பாடியாருக்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாக்கி உள்ளது. கடந்த 172 தொகுதிகளிலும் எழுச்சி பயணத்தில் செல்லும்போது மக்கள் மிகசிறந்த வரவற்பை அளித்தனர். இதுவரை யாரும் செல்லாத வகையில் 172 தொகுதிகளில் இப்போதே பிரச்சாரத்தை சிறப்பாக நடத்திவிட்டார். இதுபோன்று யாரும் செய்யவில்லை. அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற போது ரோட்டில் மக்கள் இல்லை காலியாக தான் இருந்தது. இதன் மூலம் அதிமுகவிற்கு வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது. அதனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தவறை சுட்டிக்காட்டும் அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டும். எஸ்.ஐ. ஆர் பணியை திமுக எதிர்க்கிறது ஆனால் தற்பொழுது திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்கு தொகுதியில் திமுக பாக முகவர்கள் 2 ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். அந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்று உள்ளார். இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று, இது ஒரு தவறான முன் உதாரணம். இதில் பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் பாக முகவர்கள் 2 ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம் அதில் பங்கேற்க வேண்டும்.
2026 இல் திமுகஆட்சிக்கு வர முடியாது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கூட 36மாதம் கழித்து தான் வழங்கினார்கள் எடப்பாடியார். 2026 ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகை 1,500 ரூபாயாக வழங்குவார். ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த பொழுது 2011 இல் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளார். 2026 இல் திமுகஆட்சிக்கு வர முடியாது. திமுக ஒருமுறை வந்த பின் மறுமுறை ஆட்சிக்கு வந்தது கிடையாது. அதிமுக பல முறை வந்துள்ளது. 2026 ஆண்டில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்” எனவும் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement




















