தீபாவளிக்கு மக்களுக்கு அதிமுக அரசு பட்டு சேலை வழங்கும்.. - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கொடுத்த உறுதி !
அடுத்த தீபாவளிக்கு மக்களுக்கு அதிமுக அரசு பட்டு சேலை வழங்கும். நீங்கள் நிச்சயம் எங்களை இங்கு வெற்றி பெற செய்வீர்கள் அதில் சந்தேகம் இல்லை. - ராஜன் செல்லப்பா நம்பிக்கை.

58 மாதங்களுக்குப் பிறகு தான் மகளிர் உரிமைத்தொகை வாங்கினார்கள். ஒவ்வொரு மகளிருக்கும் 58 ஆயிரம் இந்த திமுக அரசு கடன் பட்டு உள்ளது. - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேச்சு.
நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி
அதிமுக 56வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இதில் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் என்கிற செல்வம் மற்றும் அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பேசிய ராஜ் சத்யன் கூறுகையில்..,” திருப்பரங்குன்றத்தின் வெற்றிக்கு விதை போடப்போவது நீங்கள்தான். நெசவாளர்களுக்காக பேசிக் கொண்டிருக்க கூடிய இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். உங்களுக்காக தேவையானவற்றை செய்வதற்கு ஏற்பாடு செய்ய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய வாக்கு அவருக்கு தான் என்று எங்களுக்கு தெரியும். சார்(SIR) என்றாலே அலர்ஜி தான். யார் அந்த சார் என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை. எஸ்.ஐ.யாருக்கு எதிராகவும் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. எஸ்.ஐ.ஆரை நடைமுறைப்படுத்துவது தமிழக அரசு ஊழியர்கள் தான். அதற்கு எதிராகவே போராடுகிறார்கள் பிரச்னைகளை மடை மாற்றம் செய்வதுதான் இவர்களின் அரசியல். மத்திய அரசிற்கு எதிராக பொய் அரசியல் செய்வதுதான் இவர்களின் வழக்கம்” என்றார்.
அடிப்படை வசதிகள் நடக்கவில்லை
கூட்டத்தில் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறுகையில்...” உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். பி.எல்.ஓ மூலம் வாக்கு சேகரிக்கும் விண்ணப்பத்தால் வந்துவிட்டதா? நாலாம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. நிச்சயம் நாளை முதல் அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்வார்கள். தெற்கு வாசல் மற்றும் விரகனூரில் இருந்து அவனியாபுரத்திற்கு உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் என்று, அமைச்சர் பி.டி.ஆர் சொன்னார். இப்போது வரை செய்யவில்லை. விமான நிலைய விரிவாக்கப்பணிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தொழில்நுட்ப பூங்காவிற்கு இன்னும் நிலம் கையகப்படுத்தி முடிக்கப்படவில்லை. ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது.
இறை உணர்வு இல்லாத ஆட்சி இன்று உள்ளது.
மதுரை வடக்கு தொகுதியை அம்மா எனக்கு ஒதுக்கி நிற்க வைத்தார். இந்த திருப்பரங்குன்றம் தொகுதி எனது சொந்தத் தொகுதி. முப்பதாயிரம் வாக்குகளில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். அடுத்த தீபாவளிக்கு மக்களுக்கு அதிமுக அரசு பட்டு சேலை வழங்கும். நீங்கள் நிச்சயம் எங்களை இங்கு வெற்றி பெற செய்வீர்கள் அதில் சந்தேகம் இல்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணி, அதிமுக தலைமையில் எடப்பாடி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டணி அமைந்துள்ளது. இறை உணர்வு இல்லாத ஆட்சி இன்று உள்ளது. மக்கள் இதை விரும்புவதில்லை. திமுக கட்சி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 58 மாதங்களுக்குப் பிறகு தான் மகளிர் உரிமைத்தொகை வாங்கினார்கள். ஒவ்வொரு மகளிருக்கும் 58 ஆயிரம் இந்த திமுக அரசு கடன் பட்டு உள்ளது. இதில் விட்டுப் போனவர்களுக்கு விரைவில் கொடுக்கப் போவதாக சொல்கிறார்கள்” என கூறினார்.





















