மேலும் அறிய

Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்

Stalin vs Vaiko : துரை வைகோ விஜய்க்கு ஆதரவாக அக்கறையுடன் பாய்வதைப் பார்த்தீர்களா! இதுதான் இவர்களுடைய சந்தர்ப்பவாதம் மிக்க பச்சோந்தி குணம்.! இவர்களுக்காகத் தானே என்னை வெளியேற்றினீர்கள்! அதற்கான கஷ்டங்களைப் படுங்கள்! என கே எஸ் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தவெகவிற்கு பல்டி அடித்த திமுக கூட்டணி கட்சிகள்

தமிழகத்தில் திமுக ஆட்சி இழந்துள்ள நிலையில், தவெக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் விஜய், வைகோவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது உற்சாக மகிழ்ச்சியில் வைகோ இருந்தார். அடுத்ததாக தவெக ஆட்சிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் மதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்கள்.

இந்த நிலையில் நேற்று திருச்சிக்கு கட்சி நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற முதலமைச்சர் விஜய்யை திருச்சி எம்பி துரைவைகோ வரவேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசமாக போட்டியிட்டுவிட்டோம். இதனால் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், 

துர்திஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டி

முன்னாள் திமுக நிர்வாகியும், தற்போது பாஜக நிர்வாகியான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டமாம். மானம் வெட்கம் ரோசம் இருந்திருந்தால் அப்பொழுதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு, கூட்டணியை விட்டு வெளியே வந்து தொலைச்சுருக்கலாமே, இந்நேரம் திமுக வெற்றி பெற்றிருந்தால்  இவர் இப்படி பேட்டி கொடுத்திருப்பாரா.? வைகோ அவர்களுக்காவது நீண்ட அரசியல் பாரம்பரியம் பின்புலம் இருக்கிறது. தந்தையின் புகழில் குளிர் காயும்  அலரின் மகன் போன்றவர்கள் வாய்த்துடுக்கோடு பேசுவது நல்லதல்ல,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னுடைய தொகுதிக்கு வருகை புரிந்த முதல்வரை வரவேற்று பொன்னாடை அணிவித்தது அரசியல் நாகரீகம்.நடைமுறை என்று கூட சொல்லலாம். ஆனால் நாங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடாமல்‌ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம் ஆகவே த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியவில்லையே என்று வருந்துகிறோம் என்று பேட்டி கொடுப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

நான் அப்பவே சொன்னேன்- கேஎஸ்ஆர்

தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் ஸ்டாலின் அவர்களைப் பற்றியும் உங்கள் தந்தை வை.கோ.அவர்கள் பேசாத பேச்சா. அத்தனை ஏச்சு பேச்சுக்களையும் மறப்போம் மன்னிப்போம் என்று புறந்தள்ளி விட்டு முற்றாக அழிந்து போன உங்கள் கட்சிக்கு உயிர்‌கொடுத்தவர் திமுக என்பதை மறந்து விடாதீர்கள். பணத்திற்கும் பதவிக்கும் நேரத்திற்கு தக்க வேஷம் போடுபவர்களை காலம் புறந்தள்ளும். நாளை தமிழக அரசியல் வரலாறு எழுதப்படும் போது வருகிற இளம் தலைமுறை‌ உங்களை எள்ளி நகையாடும் என கே எஸ் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நீங்கள் வைகோவை அருகில் இழுத்து வைத்துக்கொண்டீர்கள்! கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினை நான் பார்த்துக் கொள்வேன்! நான் அவருக்குப் பக்கபலமாக இருப்பேன் என்று சொன்ன வைகோ…. புதல்வர் துரை வைகோவும் அவரோடு இருக்கும் மற்றவர்களும் விஜய்க்கு ஆதரவாக அக்கறையுடன் பாய்வதைப் பார்த்தீர்களா! இதுதான் இவர்களுடைய சந்தர்ப்பவாதம் மிக்க பச்சோந்தி குணம்.! இவர்களுக்காகத் தானே என்னை வெளியேற்றினீர்கள்! அதற்கான கஷ்டங்களைப் படுங்கள்! சொல்லும்போதே எச்சரிக்கும் போதே நீங்கள் கேட்டிருக்கலாம்!. கேட்கவில்லை!அதற்கான கஷ்டத்தை நீங்கள் பட்டுத் தான் ஆக வேண்டும்! என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget