Malappuram:” இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மலப்புரம் வேறு நாடு” வெடித்த சர்ச்சை: SNDP நடேசனுக்கு பாஜக ஆதரவு!
Malappuram- Vellappally Natesan: கேரளம் மாநிலத்தின் மலப்புரம் பகுதியான வெவ்வேறு மக்களின் பகுதி, அது ஒரு வேறு நாடு என சர்ச்சை கருத்தானது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளம் மாநிலத்தின் மலப்புரம் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசித்து வரும் நிலையில், இது வேறு நாடு, அங்கு வாழ முடியாது என SNDP அமைப்பின் பொதுச் செயலாளர் நடேசன் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவான கருத்தை பாஜக தெரிவித்துள்ளது.
”மலப்புரம் வேறு நாடு”
மலப்புறம் மாவட்டம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 70% முஸ்லிம் மற்றும் 27.6% இந்து மக்களைக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில், முஸ்லிம்கள் அதிக வகிக்கும் பகுதியை குறிப்பிட்டு, நடேசனின் இந்தக் கருத்து, சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கேரளாவின் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன (SNDP) யோகத்தின் பொதுச் செயலாளர் வெல்லப்பள்ளி நடேசன், மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், மலப்புரம் மாவட்டத்தை "வேறொரு நாடு" என தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது, “ "மலப்புரம் பகுதியின் காற்றை சுவாசித்து நீங்கள் வாழ முடியாது என்று நான் நினைக்கிறேன். அங்கு சுதந்திரமாக கருத்தைக் கூட சொல்ல முடியாது. மலப்புரம் ஒரு வேறு நாடு. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அங்கிருக்கும் பின் தங்கிய சமூகங்களான ஈழவ உள்ளிட்ட பிரிவினர் பயனடைந்துள்ளனா, இது வெவ்வேறு மக்களின் பகுதி” என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் புகார்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தலைவர் சையத் சாதிக் அலி ஷிஹாப் , நடேசனின் இந்தக் கருத்தை கண்டித்தார். அவர், "ஒருவர் மலப்புரம் மாவட்டத்தை விமர்சிக்கையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அல்ல, புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் மாவட்டத்தை விமர்சிக்கிறார். இது பல வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களின் இல்லம். இது அனைவரின் மாவட்டம், ஒரு சமுதாயத்தின் மட்டும் அல்ல," என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF), நடேசன் மீது ‘சமூகத்தில் வகுப்புவாதப் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்ததாக காவல்துறையில் புகார் அளித்தது. மேலும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) மற்றும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) ஆகியவையும் நடேசனின் கருத்தை கண்டித்துள்ளன.
Also Read: இந்தியா, பாகிஸ்தானுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: எதற்காக?
பாஜக ஆதரவு:
இந்த சம்பவம் குறித்து கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவிக்கையில்,மலப்புரத்தைப் பற்றி நடேசன் சரியாகத்தான் சொன்னார். இது உண்மை. மலப்புரத்தில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் செயல்படாது," என்று நடேசனுக்கு ஆதரவு கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து விமர்சனங்களுக்கு பதிலளித்த நடேசன், தனது கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. எனது சமீபத்திய உரையில், மலப்புரத்தில் சமூக நீதி இல்லை என்பதை மட்டுமே குறிப்பிட்டேன். அது உண்மை," என்று கூறினார்.மேலும், மலப்புரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் சமூக, அரசியல், கல்வி மற்றும் பொருளாதார நீதி பெறவில்லை என்றும், அவர்கள் அங்கு "அடிமைகள்" போல வாழ்கிறார்கள் என்றும் நடேசன் குற்றம் சாட்டினார்.





















