பாம்பன் புதிய ரயில் பாலம் -பிரதமர் மோடி திறப்பு
வெர்டிகல் லிஃப்ட் வசதி கொண்ட நாட்டின் முதல் கடல் பாலமான ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ராமேஷ்வரம் - தாம்பரம் வரையிலான புதிய ரயில் சேவையையும் தொடங்கி வைத்திருக்கிறார்.
ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவுடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் மண்டபம் கடற்கரையிலிருந்து, பாம்பன் கடற்கரை வரையிலும் கடலில் ரயில் பாலமும் அதன் நடுவே கப்பல் கடந்து செல்ல தூக்குப் பாலம் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 24.02.1914ல் திறக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் கட்டப்பட்ட முதல் நீளமான கடல் பாலம் ஆகும்.
இந்தப் பாலம் ராமேஸ்வரம் தீவுடன் இந்திய நாட்டின் பிரதான நிலப்பகுதியை இணைக்கிறது. கடலோர உள்கட்டமைப்பில் இணைப்பு மற்றும் புதுமையின் நவீன அடையாளமாக திகழ்கிறது.
ரூ.550 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த 2.08 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம், அதிநவீன 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த லிப்ட் பொறிமுறையானது 17 மீட்டர் வரை உயர அனுமதிக்கிறது.
இது துருப்பிடிக்காத எஃகு கலவைகள், அரிப்பை எதிர்க்கும் பாலிசிலோக்சேன் பெயிண்ட் மற்றும் முழுமையாக பற்றவைக்கப்பட்ட மூட்டுகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் நீண்ட கால ஆயுள் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பை உறுதி செய்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரமும், 333 கான்கீரிட் அடித்தளம், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள், 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட், இது 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் நடுப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பிறகு, நரேந்திர மோடி ராமேஷ்வரம் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.
”தெய்வீக தற்செயலாக, அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் இது நடந்தது. இருவரின் தரிசனத்தையும் பெற்ற பாக்கியம். பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.