இந்தியா, பாகிஸ்தானுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: எதற்காக?
Hajj 2025: கடந்த ஹஜ் பயணத்தின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இடைக்கால விசா தடையை சவுதி அரசாங்கம் விதித்துள்ளது

ஹஜ் பயண யாத்திரையை முன்னிட்டு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு, சவுதி அரேபியா வருவதற்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சவுதி அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹஜ் பயணம்:
சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கான ஹஜ் பயண யாத்திரை தொடங்கவுள்ளது. ஹஜ் பயணம் என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். இதில் அவர்கள் சவுதி அரேபியாவின் மக்கா நகருக்குச் சென்று, இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள்.
கடந்த 2024 ஹஜ்ஜின் போது, 1,200 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள், கூட்ட நெரிசல் காரணமாக தங்கள் உயிர்களை இழந்தனர். அவர்களில் பலர் தங்குமிடம், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை அணுக முடியாத சூழலுக்கும் உள்ளாகியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றின் போது நெரிசல் மற்றும் பாதுகாப்பு சவால்களை கையாளும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
14 நாட்களுக்கு விசா தடை:
இந்நிலையில் வணிக மற்றும் குடும்ப வருகை விசாக்களை வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளது. ஹஜ் பருவத்தின் முடிவுடன் இணைந்து, இந்த தற்காலிக தடை ஜூன் நடுப்பகுதி வரை அமலில் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
இந்த இடைக்கால தடையானது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் அல்ஜீரியா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, சூடான், துனிசியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடைக்கால தடையானது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே செல்லுபடியாகும் உம்ரா ( புனித பயணம் ) விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நுழையலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சவுதி அரேபியாவும் ஒரு வருட பல-நுழைவு விசாக்களை இப்போதைக்கு ரத்து செய்துள்ளது, மேலும் பிப்ரவரி 2025 முதல் 14 நாடுகளில் இருந்து ஒற்றை-நுழைவு, 30 நாள் விசாக்களாக பயணத்தை மட்டுப்படுத்துவதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சவுதி அரசு விளக்கம்:
இது குறித்து சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்த இடைக்கால விசா தடையானது, ஒரு ஒழுங்கான யாத்திரையை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதல்ல என்றும் தெரிவித்துள்ளது. ஹஜ், அரசு முறை பயணம் மற்றும் வசிப்பிடத்துடன் தொடர்புடைய விசாக்களுக்கு தடை இல்லை என்றும், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட யாத்ரீகர்கள் தங்கள் பயண திட்டங்களைத் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.





















