மேலும் அறிய

உருமாறிய அதிமுக அலுவலகம்! விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு புகார்

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை மற்றும் அவருக்கு வழங்கிய பரிசுப்பொருட்களை காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக அலுவலகம் இன்று திறக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் சிலை மற்றும் அவருக்கு வழங்கிய செங்கோலை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஈபிஎஸ் தரப்பு புகாரளித்துள்ளது. மேலும் 2வது தளத்தில் இருந்த விலை உயர்ந்த வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

உருமாறிய அதிமுக அலுவலகம்! விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு புகார்

அதிமுக அலுவலகத்திற்கு சீல்:

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதிமுக அலுவலகம் திறப்பு:

அதிமுக தலைமை அலுவலத்தின் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. 

காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஆர்.டி.ஓ. ஒப்படைக்க வேண்டும் எனவும், காவல்துறை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு  தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்பட்ட அலுவலகத்தில் பீரோ மற்றும் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவைகள் உடைக்கப்பட்டு இருந்தன.  மேலும் அங்கு ஆவணங்கள் உள்ளிட்டவைகள் சிதறி கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

உருமாறிய அதிமுக அலுவலகம்! விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு புகார்

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின்  2வது தளத்தில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், செங்கோல் மற்றும் வெள்ளி உள்ளிட்டவைகளை காணவில்லை ஈபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு அதிமுக தொண்டர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ABP EXCLUSIVE : ஓபிஎஸ் ஏன் ஒதுக்கப்படுகிறார் மனம் திறந்த மாஜி அமைச்சர் ஜி.பாஸ்கரன்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
‘மூடர் கூட அரசின் விளம்பர வெறி – கருகும் பயிர்கள்’ அட்டாக் மோடில் உதயநிதி..!
‘மூடர் கூட அரசின் விளம்பர வெறி – கருகும் பயிர்கள்’ அட்டாக் மோடில் உதயநிதி..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget