மேலும் அறிய

கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எட்டப்பன் கே. பி. முனுசாமிதான் காரணம் - கிருஷ்ணமூர்த்தி

தொண்டர்களின் விருப்பப்படி ஓபிஎஸ் செயல்படுவார் எடப்பாடி பழனிசாமி தவிர மற்றவர்கள் கட்சிக்கு வரலாம் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாமாண்டு திதி நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைவர்கள் பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பெரியகுளம் வந்திருந்தார். அவர் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு  எட்டப்பன் கே. பி. முனுசாமிதான் காரணம் - கிருஷ்ணமூர்த்தி

அப்போது பேசுகையில், ”தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அவர்களை நயவஞ்சகமாக கூட்டு சேர்த்து பின்னர் காலை வாரி விட்டுள்ளார்  எடப்பாடி பழனிசாமி.  ஓபிஎஸ் உடன் இருந்த செம்மலை உட்பட யாருக்கும் சீட் தராமல் ஏமாற்றியுள்ளார். இனியாவது அவர் திருந்த வேண்டும். இல்லையெனில் ஒன்றரை கோடி தொண்டர்கள் சேர்ந்து அவர்களை திருத்த வேண்டும். குறிப்பாக தொண்டர்களை குழப்ப வேண்டாம் என்று எடப்பாடியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு  எட்டப்பன் கே. பி. முனுசாமிதான் காரணம் - கிருஷ்ணமூர்த்தி

எடப்பாடி உட்பட அனைவரும் ஒதுங்கி விடுங்கள். ஓபிஎஸ் தலைமையில் கட்சியை நாங்கள் நன்றாக வழி நடத்துகிறோம். தற்போதைய நீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாமல் ஆறு கோடி மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. எனவே ஓபிஎஸ் அவர்கள் நடந்தவற்றை மறந்து விட்டு அனைவரும் ஒன்றாக இருந்து கட்சியை நன்றாக வழி நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு  எட்டப்பன் கே. பி. முனுசாமிதான் காரணம் - கிருஷ்ணமூர்த்தி

எடப்பாடி எந்த வேலையும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் தென் மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்தவில்லை. ஓபிஎஸ் ஜானகி அணியை சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். ஆனால் தம்பிதுரை, வளர்மதி, உசேன், சி.வி சண்முகம் ஆகியோர் அனைவரும் ஜானகி அணியை சேர்ந்தவர்கள் தான். எனவே அவர்களை நீக்குவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசுகையில், ஜெயலலிதா இருந்த போது ஓபிஎஸ் அவர்களை நிகழ்கால பரதன் என்று குறிப்பிட்டுள்ளார். உதயகுமார் நேரத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு பேசி வருகிறார். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருக்கு 45 சதவீதம் பேர் ஆதரவாக இருந்ததால் அவரை நயவஞ்சமாக கூட்டு சேர்த்து எடப்பாடி முதலமைச்சராகி விட்டார்.

கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு  எட்டப்பன் கே. பி. முனுசாமிதான் காரணம் - கிருஷ்ணமூர்த்தி

பின்னர் ஓபிஎஸ் அய்யாவின் காலை வாரி விட்டுள்ளார். எனவே இவர்கள் அனைவரும் ஒதுங்கி விட்டால் ஓபிஎஸ் தலைமையில் கட்சியை வழிநடத்தி திமுகவை வீழ்த்துவோம் என்றார். அதிமுக கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எடப்பாடியுடன் உள்ள எட்டப்பன் கே. பி. முனுசாமி தான் காரணம். வாய் தான் அவருக்கு மூலதனம். அவர் ஏதேனும் கூறி குழப்பி கட்சியை அழிக்க பார்க்கிறார். அவர் நேருக்கு நேர் பேச தயாரா?.” என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி இல்லாமல் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை வைத்து கட்சியை நடத்துவீர்களா? என்று கேட்டதற்கு ஓபிஎஸ் என்ன கட்டளையிடுகிறாரோ? அதன்படி செய்ய அனைத்து தொண்டர்களும் காத்திருப்பதாக கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget