மேலும் அறிய
பிடிஆர் பேசிய ஆடியோ பொய் என்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்து வாய்ஸ் டெஸ்ட் கொடுங்கள் - சிவி சண்முகம்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பொய் என்றால் ஏன் இதுவரை அதுகுறித்து புகாரளிக்கவில்லை என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கேள்வி
![பிடிஆர் பேசிய ஆடியோ பொய் என்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்து வாய்ஸ் டெஸ்ட் கொடுங்கள் - சிவி சண்முகம் If the audio spoken by PDR is false, report it to the police and take a voice test CV Shanmugam TNN பிடிஆர் பேசிய ஆடியோ பொய் என்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்து வாய்ஸ் டெஸ்ட் கொடுங்கள் - சிவி சண்முகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/96a337ace5fe25a34cd2da2c4ef7f8be1682940228223194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம்
விழுப்புரம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பொய் என்றால் ஏன் இதுவரை அதுகுறித்து புகாரளிக்கவில்லை என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு காவல் துறை ஏவல் துறையாக செயல்படுவதாகவும், தமிழகத்தில் கொலை, கொள்ளை ,பாலியல் தொல்லை குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் பச்சை பொய்யை கூறிவருவதாகவும் எங்கே பார்த்தாலும் கூட்டு பாலியல், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக குற்றச்சாட்டினார். அதனை தொடர்ந்து பேசிய சிவி சண்முகம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 26,27 ஆம் தேதி விழுப்புரத்திற்கு கள ஆய்விற்காக வந்த போது வடமாநிலத்தை சார்ந்த சிறுமியை 4 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
முதல்வர் வருகையின் போது நடைபெற்ற சம்பவத்தை காவல் துறையினர் மூடி மறைத்தனர் என்றும் ஏன் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். வெளி மாநிலங்களிலிருந்து வந்து தொழில் புரிவோருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் திமுக ஆட்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கிற நிதி அமைச்சர் பிடி பழனிவேல்தியாகராஜன் பேசிய ஆடியோ வெளிவந்தததில் உதயநிதி ஸ்டாலின் சபரீசன் 30 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சேர்த்து வைத்துள்ளார்கள் அதனை எதில் முதலீடு செய்ய வேண்டும் என புரியாமல் உள்ளதாகவும் கொள்ளை அடித்த பணம் குறித்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன் முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை ஆடியோ வெளியிட்டவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்தாண்டு மூலதன செலவு என்பது 36 ஆயிரம் கோடி இவர்கள் கொள்ளை அடித்து இருப்பது 30 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் 2லட்சத்து 70 ஆயிரம் கோடியில் 30 ஆயிரம் கோடியை ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்ளை அடிதுள்ளார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதியை கொள்ளையடிப்பதில் மிஞ்சி இருக்கிறார் ஸ்டாலின் என்றும் திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருவதாகவும், தொழிலாளர் சட்டம் கொண்டு வந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ள நிலையில் 12 மணி நேரமாக மாற்றும் அரசாக செயல்பட்டு வருவதாகவும் பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளபோது அவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்பதாகவும், தெரிவித்தார். ஜி கொயர்ல நடைபெற்ற முறைகேடு குறித்து முறையாக விசாரனை செய்ய வேண்டும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்து வருகிறது. திமுக அரசு கோமாளி அரசாக செயல்பட்டு வருவதாகவும் சட்டம் போட வேண்டியது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே பின்வாங்குவதை தான் ஸ்டாலின் அரசு கொண்டுள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion