மேலும் அறிய

"எடப்பாடி பழனிசாமி எங்களுடன் வந்தால் அவரையும் சேர்த்து ஒன்றிணைவோம்" -வைத்திலிங்கம்

இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜீரோ தான் வரும். ஒன்று சேர்ந்தால் ஹீரோ ஆகிவிடும்.

சேலத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என கோர்ட்டில் கூறியுள்ளனரா? தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் இபிஎஸ் அணிக்கு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு கொடுத்து இருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பு அடுத்த மாதம் வர உள்ளது. அதுவரை கொடியையும், இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதையும் யாராலும் தடுக்க முடியாது. அதிமுக ஒன்றுபட வேண்டும். அதுதான் எங்களின் எண்ணம். இபிஎஸ்க்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை. தான் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற அதிமுகவை கேடயமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். எடப்பாடி இடம் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் இடையே புரட்சி வெடிக்க போகிறது. நிச்சயமாக நாங்கள் ஒன்றிணைவோம். எடப்பாடி பழனிசாமி எங்களுடன் வந்தால் அவரையும் சேர்த்து ஒன்றிணைவோம். அவர் வரவில்லை என்றால் அவரை தவிர்த்துவிட்டு நாங்கள் ஒன்று இணைவோம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். கூடிய விரைவில் சேலம் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தேதி அறிவிக்கும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் மாநாட்டை நடத்தி முடிப்போம். அதிமுக மதுரை மாநாட்டிற்கு முன்னால் சேலம் மாநாடு நடைபெறும். ஓபிஎஸ் விளக்கிய பிறகு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை வல்லவர் என்றும் இவருக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். பிறகு தேர்தல் நின்றது. டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். அரசியலில் பிரிந்து செல்வதும், இணைவதும் சகஜமான ஒன்று. அதுபோல் கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கட்சியில் சுயநலம் என்றால் எடப்பாடி நினைப்பது போல் இணையாமல் போகலாம். ஆனால் நாங்கள் நினைப்பது இணைய வேண்டும் என்பதுதான். அனைவரையும் ஒன்றிணைத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான் இருக்கும். பொதுச்செயலாளர் பதவி இருக்காது. சட்ட விதிப்படி நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா தான்.

ஓபிஎஸ் சொன்னது போல் சசிகலாவை சந்திப்பார். சசிகலா மீண்டும் கட்சிக்கு வந்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும், எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைந்தால் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள். சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்து மக்களின் நலன் கருதி பதவி குறித்து முடிவெடுப்பார்கள். திருச்சி மாநாட்டில் மூன்று லட்சம் பேரை ஒன்றிணைத்து தொண்டர்கள் எங்கள் பக்கம் என்று நிரூபித்தோம். தொண்டர்களிடையே கடுமையான எழுச்சி இருந்தது. கொங்கு மண்டலத்தில் அதேபோன்று எழுச்சியை சேலத்தில் காட்ட வேண்டும் என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சியாக அமையும். எடப்பாடியில் கூட்டம் நடத்த சென்றபோது காவல்துறையினரின் ஆதரவுடன் கொடி கட்டுவதை தடுத்து இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் எடப்பாடி பழனிசாமி எந்த ஊரிலும் நடமாட முடியாது. எங்களால் எதையும் செய்ய முடியும். ஆனால் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியாக எங்களது கருத்துக்களை கூறுங்கள். ஆனால் உங்கள் ஊருக்கு வரும்போது 10 பேர்களை வைத்து பயமுறுத்த ஒரு முன்னாள் முதல்வர் நினைப்பது அவருக்கான அழகும் இல்லை, தகுதி இல்லாமல் முதல்வராக இருந்துவிட்டார் என்பதுதான். எதையும், எடப்பாடியையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதிமுகவில் இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜீரோ தான் வரும். ஒன்று சேர்ந்தால் ஹீரோ ஆகிவிடும்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget