மேலும் அறிய
Advertisement
‘பொங்கல் தொகுப்பு ரூ.5 ஆயிரம் என எதிர்க்கட்சிக்கு முதலில் கூறியது நான் தான்’ - ஓபிஎஸ்
பொங்கல் தொகுப்பு ஐந்தாயிரம் ரூபாய் என்று எதிர்க்கட்சிக்கு அறிவுறுத்தியது எடப்பாடி அல்ல முதலில் கூறியது நான் தான்
மதுரையிலிருந்து டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,” அ.தி.மு.க.,வின் சட்ட விதிகளின்படி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தான் இருந்தோம். தற்போதுவரை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் இன்று வரை அப்படித்தான் கடிதம் அனுப்பி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவதாக வந்த செய்தி குறித்த கேள்விக்கு
இதுவரை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மட்டுமே கடிதம் அனுப்பி உள்ளது வேறு எந்த முடிவும் அல்ல இதுகுறித்து தவறான தகவல்களை சிலர் அளிக்கின்றனர். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல வெளியிலும் பல்வேறு குளறுபடிகளை செயற்கையாக சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு கொடுத்த கேள்விக்கு தமிழக விவசாயிகள் இந்த வருடமும் பொங்கல பரிசாக கரும்பு வழங்குவார்கள் என்ற தான் எண்ணி எண்ண தேவை என்று பயிரிட்டார்கள் அதை ஏற்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழக அரசு 5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு
பொங்கல் தொகுப்பு ஐந்தாயிரம் ரூபாய் என்று எதிர்க்கட்சிக்கு அறிவுறுத்தியது எடப்பாடி அல்ல, முதலில் கூறியது நான் தான். செய்தியாளரிடம் நீங்க எந்த சேனல் என கேட்டு சிரித்து கொண்டே சென்றுவிட்டார்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pugar petti: பஸ் வசதி இல்லை; எட்டாக் கனியாக மாறும் பெண் கல்வி, சிவகங்கை மாவட்டத்தின் அவல நிலை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion