(Source: ECI/ABP News/ABP Majha)
BJP: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதி: போட்டியிட்ட 11 முஸ்லிம்களும் தோல்வி; வென்ற பாஜக வேட்பாளர்.!
KUNDARKI BY-Election: உத்தர பிரதேசம் குந்தர்கி இடைத்தேர்தலில் , போட்டியிட்ட அனைத்து இஸ்லாமிய வேட்பாளர்களையும் எதிர்த்து போட்டியிட்ட இந்து வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிக வாழும் குந்தர்கி பகுதியில், இந்து வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இடைத்தேர்தல்:
நேற்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றன. இத்துடன் பல மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்த்லும் நடைபெற்றது.
அதில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குந்தர்கி சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இந்த தொகுதியானது 65 சதவிகிதம் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தொகுதியானது, சமாஜ்வாதி கட்சியின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகிறது.
Also Read: Redmi A4 5G: ரூ. 8,499க்கு 5ஜி, 4 GB RAM மொபைலை அறிமுகம் செய்த ரெட்மி: எப்போது விற்பனைக்கு வரும்?
பாஜக வேட்பாளர் வெற்றி:
இந்நிலையில், இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். போட்டியிட்ட 12 போட்டியாளர்களில் 11 பேர் இஸ்லாமியர்கள், ஒருவர் மட்டும் இந்து மதப் பிரிவைச் சேர்ந்தவர்.
இந்த தருணத்தில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாக குந்தர்கி இருந்தாலும், பாஜகவைச் சேர்ந்த இந்து சமுதாயத்தைச் சேர்ந்த ராம்வீர் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இவர், 1,70,371 வாக்குகள் பெற்று, 144791 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர், அங்கு வாழும் இஸ்லாமிய மக்களுடன் மிகவும் நல்லிணக்கத்துடன் பழகி வந்ததன் காரணமாக , இந்த வெற்றி கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.